பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடித்து மே 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாமன். ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். விடுதலை, கருடன், விடுதலை 2, கொட்டுக்காளி படங்களை தொடர்ந்து சூரி மற்றொரு படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதையும் எழுதியிருக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இப்படம் நம் மனதை கவர்கிறதா ? வாருங்கள் பார்க்கலாம்.
தந்தை இன்றி வளரும் சூரி தனது அக்காவுக்கு பிறக்கும் குழந்தையை எப்போதும் கொஞ்சி உறவாடுகிறார். ஊர் கண்ணு பட்டது போல மாமன் உறவு சூரியின் திருமண வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை சூரி எப்படி சமாளித்தார் என்பதே மாமன்.
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இன்றி தவிக்கும் சுவாசிகாவின் தம்பி சூரி பாசம் மட்டுமே காட்ட தெரிந்த கதாபாத்திரம். சுவாசிகா - பாபா பாஸ்கருக்கு பிறக்கும் குழந்தையை தனது குழந்தை போல் பாவித்து வளர்க்கிறார். சூரியின் பாசத்தை பார்த்து அவரை காதலித்து திருமணம் செய்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சுவாசிகாவின் குழந்தையால் இருவரின் திருமண உறவில் சிக்கல் ஏற்படுகிறது. சூரியை மறக்கடிக்க குழந்தையிடம் மிகப்பெரிய பொய்யை சுவாசிகா சொல்லிவிடுகிறார். சூரி - ஐஸ்வர்யா லட்சுமி - சுவாசிகா இடையே மோதல் அதிகரிக்கிறது. கடைசியில் குடும்பம் எப்படி ஒன்று சேர்ந்தது என்பதே மாமன்.
மேலும் படிங்க டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் : படம் நல்லா இருக்கா ? இல்லையா ? கொலை பண்றாங்களா ?
மாமன் படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட ரசிகர்களை சூரி கடுமையாக சாடியிருந்தார். குடும்ப உறவுகள் பற்றி கண்மூடித்தனமாக தனக்கு பிடித்ததை எழுதி அதை வலுகட்டாயமாக ரசிகர்களுக்கு காண்பிப்பதும் விமர்சனம் செய்ய வேண்டியதே.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com