herzindagi
image

டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் : படம் நல்லா இருக்கா ? இல்லையா ? கொலை பண்றாங்களா ?

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் விமர்சனத்தை பார்ப்போம். டிடி நெக்ஸ்ட் லெவல் நல்லா இருக்கா ? இல்லையா ? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Editorial
Updated:- 2025-05-18, 15:49 IST

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். முந்தைய பாகங்களின் வெற்றி காரணமாக இம்முறை புதிய கதைக்களத்துடன் டிடி நெக்ஸ்ட் லெவல் எடுத்துள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி சங்கர், நிழல்கள் ரவி, கீதிகா, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், கிங்ஸ்லி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்தில் சந்தானம் சொல்வது போல நல்லா இருந்தா நல்லா எழுதியிருப்போம், நல்லா இல்லைனா கடுமையாக விமர்சனம் செஞ்சு இருப்போம். வாருங்கள் டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனத்தை பார்க்கலாம்.

டிடி நெகஸ்ட் லெவல் கதைச் சுருக்கம் 

யூடியூப்பில் படங்களை விமர்சனம் செய்யும் சந்தானம் பேய் திரையரங்கில் குடும்பத்துடன் சிக்கி கொள்கிறார். அங்கிருந்து தப்பிப்பதற்கு செய்யும் குட்டி கலாட்டாவே  டிடி நெக்ஸ்ட் லெவல்.

டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்

படத்தை திரையரங்கில் சரியாக பார்க்காமல் விமர்சனம் செய்பவர்களையும், திட்டமிட்டு விமர்சனம் செய்யும் யூடியூபர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்து திட்டமிட்டு கொலை செய்கிறார் பேய் ஆக நடித்திருக்கும் செல்வராகவன். இதில் யூடியூபர் கிஸ்ஸா எனும் சந்தானமும் குடும்பத்துடன் சிக்கி கொள்கிறார். படத்திற்குள் கதாபாத்திரங்களாக சிக்கி கொள்ளும் தன் குடும்பத்தை எப்படி சந்தானம் மீட்கிறார் என்பதே டிடி நெக்ஸ்ட் லெவல்

டிடி நெக்ஸ்ட் லெவல் பாஸிட்டிவ்ஸ்

  • மொட்ட ராஜேந்திரன், கெளதம் வாசுதேவ் மேனன் சிறப்பாக நடித்துள்ளனர். கெளதம் மேனனின் காக்க காக்க, லியோ, வேட்டையாடு விளையாடு படங்களை பயன்படுத்திய விதம் சிறப்பு.
  • பின்னணி இசை ஈர்க்கும் படி இல்லை என்றாலும் பல காட்சிகளுக்கு உதவுகிறது.
  • மொட்ட ராஜேந்திரனின் மம்மி காமெடி உள்ளிட்ட சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது.
  • முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாகவே இருந்தது. 

டிடி நெக்ஸ்ட் லெவல் நெகட்டிவ்ஸ்

  • முந்தைய பாகங்களில் காமெடியை மையப்படுத்தி பேய் சேர்த்து நகர்த்தி இருப்பார்கள். இதில் ஆரம்பம் முதலே படம் சீரியஸாகிவிடுகிறது. சந்தானமும் சிரிக்க வைக்க வாய்ப்பு கிடைக்காமல் சீரியஸாக நடித்துள்ளார்.
  • கஸ்தூரி, யாஷிகா ஆனந்தின் ஓவர் ஆக்டிங்கிற்கு தனி விருது கொடுக்கலாம். ஏன் படத்தில் கஸ்தூரி தெலுங்கு பேசுகிறார். சந்தானத்திற்கு அம்மா கதாபாத்திரத்திற்கு அவர் துளியும் பொருந்தவில்லை. அதே தான் யாஷிகா ஆனந்திற்கும்.
  • நிழல்கள் ரவியை வைத்து முயற்சிக்கப்பட்ட பாத்ரூம் காமெடி முக சுழிப்பை ஏற்படுத்துகிறது. சிரிப்பே வரவில்லை. 
  • செல்வராகவனின் நோக்கம் என்ன ? அவர் எதேனும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட திரையரங்க உரிமையாளரா ? விமர்சனம் செய்வதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் நல்ல படங்களை இயக்க யாருமே இல்லையா என்ற கேள்வி எழுகிறது. 

டிடி நெக்ஸ்ட் லெவல் ரேட்டிங் - 2 / 5

இதை பொழுபோக்கு படமாக திரையரங்கில் பார்க்கும் அளவிற்கு கூட சுமாராக இல்லை. சந்தானம் ப்ரோ படம் நல்லா இல்லை ப்ரோ.... நல்ல படமா எடுங்க ப்ரோ...

மேலும் படிங்க  Good Bad Ugly விமர்சனம் : அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட மாஸான பொழுதுபோக்கு படம்

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com