ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் ஹரி ஹர வீரமல்லு. தெலுங்கு படமான ஹரி ஹர வீர மல்லு இதர மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது. நிதி அகர்வால், சத்யராஜ், பாபி தியோல், சுனில், சச்சின் கேடேகர், சுப்பாராஜு, ரகு பாபு, நாசர், கபிர் துஹான் சிங் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் உண்மை கதையல்ல. 400 - 450 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் கற்பனையாக ஹரி ஹர வீர மல்லு கதாபாத்திரத்தை இணைத்து படமாக எடுத்துள்ளனர். இதில் தற்போது பாகம் 1 ஸ்வார்ட் Vs ஸ்பிரிட் வெளியாகியுள்ளது. வாருங்கள் ஹரி ஹர வீர மல்லு படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
தனது ஆன்மிக குருவை சிறைபிடித்துள்ள மன்னன் ஒளரங்கசீப்பை தேடி பவன் கல்யாண் டெல்லிக்கு பயணப்படுகிறார். ஹரி ஹர வீர மல்லு எனும் பவன் கல்யாண ஒளரங்கசீப்பை சந்தித்தாரா ? குருவை மீட்டாரா ? என்பதே ஹரி ஹர வீர மல்லு.
சிறு சிறு திருட்டுகளை செய்யும் பவன் கல்யாணுக்கு ஒரளங்சீப்பிடம் உள்ள கோஹினூர் வைரத்தை திருடி வந்தால் மிகப்பெரிய தொகை வழங்குவதாக குறுநில மன்னர் வாக்குறுதி அளிக்கிறார். இந்த பயணத்தில் பவன் கல்யாணுடன் செல்லும் நபர்களை அவருடைய நோக்கம் வேறு என புரிந்து கொள்கின்றனர். தனது ஆன்மிக குருவை மீட்கவே ஒளரங்கசீப்பை தேடி செல்வதாக பவன் கல்யாண் கூறுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது ? 2.30 மணி நேரத்தில் வரலாற்று பூனைவுடன் மாஸான தெலுங்கு படம் எடுக்க முயன்றுள்ளனர்.
இணையத்தில் உலாவும் விமர்சனங்கள் அளவுக்கு படம் மோசமாக இல்லை. உண்மையை சொன்னால் சிலருக்கு கசக்கும் என்பதற்காக படத்திற்கு முத்திரை குத்த முயல்கின்றனர். இந்தியாவில் ஏராளமான கோவில்கள் எந்த காலக்கட்டத்தில் அழிக்கப்பட்டவை என எல்லோரும் அறிவர். படத்தை படமாக பாருங்கள்...
மொத்தத்தில் ஹரி ஹரி வீர மல்லு லாஜிக் இன்றி ரசித்து பார்க்க கூடிய தெலுங்கு படமே.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com