8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ஸ்ரீ கணேஷின் அடுத்த படம் 3BHK ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா ஜே. அச்சர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அருண் விஷ்வா இப்படத்தை தயாரித்துள்ளார். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை சார்ந்து எடுக்கப்பட்ட இந்த 3bhk திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசான நிலையில் படம் எப்படி இருக்கு என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
வாசுதேவன் கதாபாத்திரத்தில் சரத்குமார் (அப்பாவாக நடிக்க), தேவயானி (அம்மா), சித்தார்த் (மகன்) மற்றும் மீதா ரகுநாத் (மகள்) இது தான் வாசுதேவன் குடும்பம். இவர்களின் ஒரே கனவு, தங்களுக்கு சொந்தமான ஒரு வீடு வாங்குவது. இந்தக் கனவை நிறைவேற்ற, சரத்குமார் கடினமாக உழைத்து பணம் சேமித்து வைக்கிறார்.
12-ஆம் வகுப்பில் படிக்கும் சித்தார்த் படிப்பில் ஒரு சராசரி மாணவர். ஆனால், அவரது பெற்றோர் அவர் பொறியியல் படித்து குடும்பத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். வீடு வாங்க 15 லட்சம் ரூபாய் சேமித்து வைத்த நிலையில், சித்தார்த் 12 ஆம் வகுப்பு பரிட்சையில் "ஜஸ்ட் பாஸ்" மட்டுமே செய்கிறார். இதனால், பொறியியல் கல்லூரியில் சீட் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக வீடு வாங்க சேமித்த பணத்தை கல்லூரி கட்டணத்திற்கு அப்பா சரத்குமார் செலவு செய்து விடுகிறார்.
மீண்டும் பணம் சேமிக்கத் தொடங்கும் இவர்களுக்கு, இப்போது வீடு வாங்க 25 லட்சம் தேவை என புரோக்கர் கூறுகிறார். இதனால், சரத்குமார் தனது தம்பியிடம் கடன் கேட்கிறார். ஆனால், அவர் "உன் மகன் கல்லூரி கேம்பஸில் தேர்வானால் மட்டுமே பணம் தருகிறேன்" என மறுக்கிறார். இதனால், வாசுதேவன் குடும்பம் மொத்தமும் சித்தார்த் கேம்பஸில் தேர்வாக வேண்டும் என்று நம்பி உள்ளனர்.
மறுபுறம் சரத்குமாருக்கு திடீரெனெ நெஞ்சு வலி ஏற்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக சேமித்த பணம் முழுவதும் செலவாகிறது. இதற்கு பிறகு மகள் மீதாவின் திருமணத்திற்கு 35 லட்சம் செலவு வருகிறது. இத்தனை போராட்டங்களை கடந்து வாசுதேவன் குடும்பம் தங்கள் கனவான 3BHK வீட்டை வாங்கினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.
இந்த படத்தில் நடித்த நடிகர்கள் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா ஜே. அச்சர் ஆகியோர் மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளனர். குறிப்பாக சரத்குமார் மற்றும் தேவயானி தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்யும் பெற்றோராக சிறப்பாக நடித்துள்ளனர். அதே போல சித்தார்த் மற்றும் மீதா பெற்றோர் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கும் பிள்ளைகளாக அவர்களின் நடிப்பு மனதை தொடுகிறது.
மேலும் படிக்க: DNA விமர்சனம்: அதர்வா நடித்துள்ள க்ரைம் திரில்லர் எப்படி இருக்கு?
இயக்குநர் ஸ்ரீ கணேஷ், மிடில் கிளாஸ் குடும்பத்தின் போராட்டங்களை மிகவும் உணர்வுபூர்வமாக இந்த பாடத்தில் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வீடு என்பது செங்கல்-சிமெண்ட் மட்டுமல்ல, குடும்பம் இருக்கும் இடமே வீடு என்பதை அழகாக கூறியுள்ளார்.
"3BHK" படம் ஒரு சாதாரண குடும்பத்தின் கனவுகள், தியாகங்கள் மற்றும் போராட்டங்களை மிகவும் உண்மையாக காட்டுகிறது. நடிகர்களின் நடிப்பு, இயக்குநரின் திறமை மற்றும் தொழில்நுட்ப தரம் அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை ரசிகர்கள் மனதை தொடும் ஒரு சிறந்த படமாக மாற்றியுள்ளது. குடும்பம் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை புரிந்துகொள்ள விரும்புவோர் இந்தப் படத்தை கண்டிப்பாக தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com