herzindagi
image

DNA விமர்சனம் : அதர்வா நடித்துள்ள க்ரைம் திரில்லர் எப்படி இருக்கு ?

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்து வெளிவந்துள்ள DNA படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். குழந்தை கடத்தல் பற்றி பல செய்திகளை படித்திருப்போம் பார்த்திருப்போம். குழந்தை கடத்தல் முழு நெட்வொர்க் போல் எப்படி செயல்படுகிறது என தெரிய DNA படத்தை பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-06-24, 20:59 IST

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடித்து ஜூன் 20ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் DNA. நிமிஷா விஜயன், பாலாஜி சக்திவேல், சேட்டன், ரமேஷ் திலக் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் குபேரா படத்தோடு வெளியானதால் ரசிகர்களின் கவனம் இப்படத்திற்கு கிடைக்கவில்லை. படம் வெளியாவதற்கு முதல் நாள் பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. விமர்சகர்கள் பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தார். DNA படம் எப்படி உள்ளது ? விமர்சனத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

DNA கதைச்சுருக்கம் 

அதர்வா - நிமிஷா சஜயன் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. பிறந்த சில நிமிடங்களிலேயே குழந்தை மாற்றப்படுகிறது. மாற்றப்பட்ட தனது நிஜ குழந்தையை அதர்வா எப்படி தேடிக் கண்டுபிடிக்கிறார் என்பதே DNA.

DNA விமர்சனம் 

காதல் தோல்வியில் துவண்டு கிடக்கும் அதர்வா சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தை திருமணம் செய்து கொள்கிறார். நிமிஷா சஜயனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவர் பிரசவித்து கண் விழித்து முழிப்பதற்குள் குழந்தையை மாற்றிவிடுகின்றனர். அதர்வாவை தவிர வேறு யாரும் நிமிஷாவின் குற்றச்சாட்டை நம்ப தயாராக இல்லை. இதன் பிறகு அதர்வா DNA பரிசோதனை மேற்கொண்டு தங்களிடம் உள்ள குழந்தை சொந்த குழந்தை இல்லை என உறுதிசெய்கிறார். காவல் அதிகாரி பாலாஜி சக்திவேலுடன் இணைந்து அதர்வா குழந்தையை தேடிக் கண்டுபிடிப்பதை 2 மணி நேரத்தில் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளனர். 

DNA படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • குழந்தை கடத்தல் பற்றி நிறைய படங்களை பார்த்திருப்போம். எனினும் இந்த படத்தில் மிக துல்லியமாக குழந்தை எப்படி கடத்தப்படுகிறது ? எதற்காக குழந்தையை கடத்துகின்றனர் ? என்பதை தெளிவாக காண்பித்துள்ளனர். 
  • சில காட்சிகளே வந்தாலும் ஒரு பாட்டி கதாபாத்திரம் நம் கவனத்தை பெறும். செய்திகளில் குழந்தை கடத்திய பாட்டி, மூதாட்டி என்று படித்திருப்போம். திரையில் அதை அப்படியே பார்த்தது போல் இருந்தது.
  • அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் மூன்று பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கட்சிதமாக செய்துள்ளனர்.
  • ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்க்கிறது. பாடல்கள் மிக சுமார் ரகமே.

மேலும் படிங்க  குபேரா விமர்சனம் : சேகர் கம்முலா - தனுஷ் கொடுத்திருக்கும் தரமான படைப்பு

DNA படத்தின் நெகட்டிவ்ஸ்

  • படத்தின் முதல் அரைமணி நேரத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் தொடர்பான காட்சிகள் தேவையற்றவை. மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. எதுவும் ரசிக்கும்படி இல்லை. 
  • இரண்டாம் பாதியில் மீண்டும் தேவையில்லாத ஆபாசப் பாடல். விறுவிறுப்பாக செல்லும் கதையில் இப்பாடல் வேகத் தடை போல் தெரிந்தது. 
  • வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதம் சொதப்பல்.

DNA ரேட்டிங் - 3 / 5

இது வழக்கமான கதை போல் தெரிந்தாலும் குடும்பத்துடன் 2 மணி நேரம் பொழுதுபோக்க நல்ல தேர்வாகும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com