ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் கூலி திரைப்படத்திற்கு, ட்விட்டரில் ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனத்தை பெறுகிறது.
மேலும் படிக்க: கூலி பட நடிகர்களின் சம்பளம்: ரஜினிகாந்த் முதல் ஆமீர் கான் வரை பல கோடிகளில் ஊதியம் பெற்ற ஸ்டார் ஹீரோக்கள்
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த கூலி திரைப்படம், உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில் பார்வையாளர்களிடம் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான கூலி திரைப்படம்:
ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் நாகார்ஜூனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஷௌபின், ஆமீர் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி இருக்கும் கூலி, இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி, பலர் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இப்படம் தொடர்பாக ரசிகர்கள் தங்கள் கருத்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
கூலி திரைப்பட ட்விட்டர் விமர்சனம்:
அந்த வகையில், அமுத பாரதி என்ற எக்ஸ் தள பயனர் தனது விமர்சனத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், "படத்தின் முதல்பாதி சராசரியாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதி அதை விட சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் காட்சிகள் படத்தில் இருந்தன. ரஜினிகாந்தின் ஸ்டைல், ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் நடிப்பு ஆகியவை படத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
https://x.com/CinemaWithAB/status/1955852771170693503
முதல் பாதியில் இருந்த திருப்பம், இடைவெளி, சண்டைக் காட்சிகள், சிங்கிள் ஷாட் காட்சி ஆகியவை சிறப்பாக இருந்தன. திரைக்கதை இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். அனிருத் சிறப்பான இசையை வழங்க முயற்சி செய்துள்ளார். படத்தில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்களின் கேமியோக்கள் நன்றாகவே இருந்தது. கூலி படத்தை லோகேஷ் கனகராஜின் திரைப்பயணத்தில் சிறப்பான ஒன்று எனக் கூற முடியாவிட்டாலும், நிச்சயம் திரையரங்கில் ரசிக்கலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவையான விமர்சனங்களை பெறும் கூலி:
https://x.com/Chrissuccess/status/1955810284184199675
இதேபோல் கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர் கூலிப்படத்தை ஆவரேஜ் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, "ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் டீஏஜிங் சிறப்பு. ரஜினிகாந்த் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். ஷௌபினுக்கு முழுமையான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. நாகார்ஜூனாவின் பாத்திரப்படைப்பு சுமாராக இருந்தது. ஸ்ருதி மற்றும் ரச்சிதாவிற்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், கதையும், திரைக்கதையும் பலவீனமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலும் வெங்கி ரிவியூ என்ற எக்ஸ் தள பக்கத்தில், "கூலி ஒரு சாதாரணமான பழிவாங்கும் கதை தான். சில சிறப்பான காட்சிகள் இருந்தாலும், மற்ற பகுதிகள் ரசிக்கும்படி இல்லை.
https://x.com/venkyreviews/status/1955844527224180996
லோகேஷின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இதில் ஆக்ஷன் காட்சிகளை விடவும், எமோஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்தாலும், லோகேஷின் பாணியில் ரசிகர்களைக் கவர்ந்த காட்சிகள் இதில் இல்லை. படத்தின் இறுதிக்காட்சியில் வரும் ஃபிளாஷ்பேக் மட்டும் சிறப்பாக அமைந்துள்ளது.
படத்தில் சில நல்ல காட்சிகளும், சிறப்பாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகளும் உள்ளன. ஆனால், படத்தின் மற்ற காட்சிகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மேலும் படிக்க: War 2 movie twitter review: கூலிக்கு போட்டியாக களமிறங்கிய வார் 2 - எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் விமர்சனம்
ரஜினி வழக்கம் போல் தனது ஸ்டைலில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு சில தனித்துவமான காட்சிகள் இருந்தாலும், லோகேஷ் அவரது கதாபாத்திரத்தை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. நாகார்ஜுனா ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் அவர் முக்கியத்துவம் இல்லாமல் சித்தரிக்கப்படுகிறார். மற்ற நடிகர்களின் கேமியோ தோற்றங்கள் தேவையற்றவையாகவும், திணிக்கப்பட்டதாகவும் உள்ளன.
அனிருத்தின் இசை படத்திற்கு பொருத்தமாக உள்ளது. முடிந்தவரை தனது இசையின் மூலம் படத்தைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். லோகேஷின் படங்களில் நாம் எதிர்பார்க்கும் தொழில்நுட்பரீதியாக சிறப்பான அம்சங்கள் இதில் இல்லை. எனவே, பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால், இது ஒரு சராசரியான திரைப்படமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் ரசிகர்களை இப்படம் திருப்திபடுத்தினாலும், பொதுவான பார்வையாளர்களிடம் இருந்து படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Sun Pictures
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation