ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வெளிவந்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. திரிஷா, பிரபு, சுனில், பிரசன்னா, சலார் கார்த்திகேயா, அர்ஜுன் தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சிம்ரன், கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். குட் பேட் அக்லி படத்தை தயாரித்த நிறுவனத்தின் மற்றொரு படமும் இதே நாளில் வெளியாகியுள்ளதால் வட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குட் பேட் அக்லிக்கு போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படவில்லை என தெரிகிறது. தமிழகத்தில் குட் பேட் அக்லிக்கு சோலா ரிலீஸ் என்பதால் மிகப்பெரிய அளவில் வசூல் ஈட்டுவது உறுதி. வாருங்கள் குட் பேட் அக்லி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
குட் பேட் அக்லி கதைச்சுருக்கம்
செய்த தவறுகளுக்கு தண்டனை அனுபவித்துவிட்டு ஸ்பெயின் செல்ல காத்திருக்கும் அஜித்திற்கு அவருடைய மகன் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைக்கிறது. மகனை காப்பாற்ற அஜித் மீண்டும் டான் அவதாரம் எடுக்கிறார்.
குட் பேட் அக்லி விமர்சனம்
மும்பை சிறையில் பல வருடங்களாக தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் அஜித் தண்டனை காலத்தில் 3 மாதம் குறைத்து தனது மகனை பார்ப்பதற்காக வெளியே வருகிறார். ஸ்பெயின் புறப்பட தயாராகும் நிலையில் அஜித்தின் மகன் கார்த்திகேயா போதைப் பொருள் வழக்கில் சிறையில் அடைக்கப்படுகிறார். தனது பகைவர்களில் யாரோ மகனை திட்டமிட்டு மாட்டிவிட்டதாக அஜித் நினைக்கிறார். மகனை மீட்க மீண்டும் கைகளில் ஆயுதம் ஏந்துகிறார். மகனை மீட்பதற்கு அர்ஜுன் தாஸுடன் நடத்தும் போராட்டமே குட் பேட் அக்லி.
குட் பேட் அக்லி படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- அஜித்திற்கு கொடுக்கப்பட்ட இன்ட்ரோ கார்டு அதற்கு மகாநதி சங்கரின் பின்னணி குரல் அமர்க்களம். படம் முழுக்க அஜித் ஜாலியாக சர்வ சாதாரணமாக நடித்துள்ளார்.
- அஜித்திற்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் நன்றாகவே இருந்தன. அஜித் - திரிஷா காட்சிகளை விட அஜித் - சிம்ரன் காட்சிகள் அட்டகாசம்.
- அர்ஜுன் தாஸின் இரட்டை வில்லத்தனம் சூப்பர். பிரியா பிரகாஷ் வாரியருக்கு பல தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கப் போகின்றன.
- அஜித் மதுரை ரவுடியில் இருந்து சர்வதேச டான் ஆக உருவெடுத்ததற்கு சொல்லப்பட்ட பிளாஷ்பேக் திரையரங்கை அதிர விட்டது.
- காட் பிளஸ் யு மாமே, ஒஜி சம்பவம் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் ஜி.வி.பிரகாஷிற்கு பாராட்டுகள்.
குட் பேட் அக்லி படத்தின் நெகட்டிவ்ஸ்
- மகனை காப்பாற்றுவது படத்தின் கதை என்றாலும் திரைக்கதையில் ஆதிக் ரவிச்சந்திரன் சொதப்பிவிட்டார். அஜித் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து படம் எழுதிவிட்டார் எனத் தோன்றுகிறது.
- இளமை இதோ இதோ பாடல் தேவையற்ற இடத்திலும், ஒத்த ரூபாய் தாரேன் பாடல் அடிக்கடி பயன்படுத்தியதும் சலிப்பு தட்டியது. டார்க்கின் புலி புலி பாடல் காதுகளுக்கு சரியாக கேட்கவில்லை.
- மும்பையில் நடக்கும் சண்டைக் காட்சியில் அஜித்தும் சுனிலும் 100 பேரை எதிர்ப்பது போல் ஆரம்பிக்கிறது. நடுவே 100 பேரும் அவர்களுக்குள் சண்டையிட்டு கொள்கின்றனர்.
- படத்தின் காட்சிக்கு இடையே ஆதிக் இந்த இடத்தில் பாடல் வைக்கட்டுமா என கேட்பது அபாண்டம்.
- அஜித் மிகவும் சிரமப்பட்டு நடனமாடியிருக்கிறார். நடனத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
குட் பேட் அக்லி ரேட்டிங் - 2.5 / 5
அஜித்தின் முந்தைய படங்களின் பல காட்சிகள் இதில் இடம்பெற்றிருந்தன. விஸ்வாசம் படம் மிஸ் ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம். விஸ்வாசம் படத்தின் கதையை ஆதிக் ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி என விவரிவாக்கம் செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் தாராளமாக இப்படத்தை பார்க்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation