herzindagi
image

Kantara Chapter 1 Box Office Collection: ரிஷப் ஷெட்டி நடிப்பில் உலகளவில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரூ. 300 கோடியை நெருங்குகிறது

வசூல் ரீதியாக வேட்டையாடிக்கொண்டு இருக்கும் காந்தாரா சாப்டர் 1  படம், 5 நாட்களில் எத்தை கோடி வசூலித்துள்ளது என்பதை பார்க்கலாம்
Editorial
Updated:- 2025-10-06, 14:09 IST

ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள காந்தாரா சாப்டர் 1  உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய மைல்கல்லை எட்டும் தருவாயில் உள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி முதல் 5 நாட்களில் ரூ.224.78 கோடி வசூல் ஈட்டியுள்ளது. 2022 ஆண்டில் வெளியான KGF சாப்டர் 2 ரூ. 380 கோடி ஈட்டியாது, அடுத்த 5 நாட்களில் ரூ. 225 கோடி வசூலை ஈட்டிய இரண்டாவது மிகப்பெரிய கன்னடப் படமாக இருக்கிறது. 

காந்தாரா அத்தியாயம் 1 பாக்ஸ் ஆபிஸ் புதுப்பிப்பு

 

காந்தாரா அத்தியாயம் 1 ஞாயிற்றுக்கிழமை உள்நாட்டில் மிகவும் வலுவான வசூலைப் பெற்றது, நான்காவது நாளில் நாட்டில் ₹61 கோடி நிகர வசூலை ஈட்டியது. இது ரிஷப் ஷெட்டி திரைப்படம் அதன் நீட்டிக்கப்பட்ட தொடக்க வார இறுதியில் ₹223.25 கோடி நிகர (₹268 கோடி மொத்த) உள்நாட்டு வசூலுடன் நிறைவு செய்ய உதவியது. இது 2022 ஆம் ஆண்டில் KGF அத்தியாயம் 2 இன் வரலாற்று சிறப்புமிக்க ₹380 கோடி உள்நாட்டு வசூலுக்குப் பிறகு, வரலாற்றில் எந்த கன்னடப் படத்திற்கும் இரண்டாவது பெரிய தொடக்க வார இறுதி ஆகும்.

Kantara Chapter 1 2

 

ரிஷ்ப் ஷெட்டி முன்னனி வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் சிறிய கதாப்பத்திரத்தில் நடித்த நடிகராக இருந்தாலும், அனைத்தி நட்சத்திர நடிகருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆன்மிகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது, ஆனாலும் அனைவராலும் கதைக்குள் சென்று உணரும் வதமாக எடுக்கப்பட்டுள்ளது. காந்தாரா சாப்டர் 1 படத்தின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பல அமானுஷ்ய விஷயங்கள் இருக்கிறது, அவை அனைத்தும் அனைவராலும் பாராட்டும் விதமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க: 'ஓஜி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைக்கும் பவன் கல்யாண்

300 கோடியை தாண்டிய முதல் திரைப்படம்

 

ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: அத்தியாயம் 1 மற்றொரு மைல்கல்லை முறியடித்தது. கன்னடத் திரைப்படம் இந்த ஆண்டு உலகளவில் ₹300 கோடியைத் தாண்டிய முதல் திரைப்படமாக இந்த படம் இருக்கிறது. வேலும் இதன் வசூம் ரீதியான வேட்டை இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

Kantara Chapter 1 3

 

மேலும் படிக்க: இன்று முதல் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9; யார் யார் போட்டியாளர்கள்? முழு விபரம் இங்கே!

 

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com