Most Searched movies 2023 : ஜெயிலரை முறியடிக்க தவறிய லியோ, வாரிசு

2023ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மூன்று தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன.

Most Googled movies in india

ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்படும் தகவல்களின் விவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளியிடும். அதன்படி 2023ல் கூகுளில் இந்தியளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலை கூகுள் நிறுவனம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் மூன்று தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. 575 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயிலர் படம் வசூலித்ததாகத் தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தின் தோல்வியால் வருத்தத்தில் இருந்த நெல்சன் திலீப்குமாருக்கும், அண்ணாத்த படத்தால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினி ரசிகர்களுக்கும் ஜெயிலர் படம் ஈடு இணையற்ற மகிழ்ச்சியை கொடுத்தது. படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத்துக்கு சொகுசு கார்களைப் பரிசாக வழங்கினார்.

லியோ

leo movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து பேன் இந்தியா படமாக வெளியான திரைப்படம் இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜெயிலரின் வசூலை முறியடித்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் ஒன்றரை வருடமாக அதிக எதிர்பார்ப்பு இருந்தும் கூகுள் தேடலில் கூட லியோ படத்தால் ஜெயிலரை முந்த முடியவில்லை.

மேலும் படிங்கஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ

வாரிசு

varisu movie

பொங்கல் விருந்தாக வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் இந்திய அளவிலான தேடலில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. திரைப்படம் சீரியல் போல் இருக்கிறது என விஜய் ரசிகர்களே வாரிசு படத்தைப் புறக்கணித்தனர். எனினும் அந்தப் படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.

இரண்டாவது இடத்தை சன்னி தியோலின் கதர் 2 திரைப்படமும், மூன்றாவது இடத்தை கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படமும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹெய்மர் மட்டுமே.

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் நான்காவது இடத்தையும், ஷாருக்கானின் பதான் திரைப்படம் ஐந்தாவது இடத்தையும், சர்ச்சைகளைக் கிளப்பிய கேரளா ஸ்டோரி திரைப்படம் ஆறாவது இடத்தையும், சல்மான் கானின் டைகர் 3 திரைப்படம் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் படிங்கஐ.எம்.டி.பி டாப் 10 மூவிஸ் - ஓப்பன்ஹெய்மர் முதலிடம்!

இதில் குறிப்பாக “எனது அருகே” என்ற வார்த்தையைக் கொண்ட தேடலில் ஜெயிலர் இடம்பெற்றுள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படம் எனது அருகே எந்தத் திரையரங்கில் ஓடுகிறது என்ற அர்த்தத்தில் இதைப் புரிந்து கொள்ளலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP