
சென்னை வடபழனியில் இருக்கும் ஏவிஎம் உருண்டையைப் பார்த்தாலே இளம் திரைக்கலைஞர்களுக்குக் கூட நம்பிக்கை வந்துவிடும். அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனாக வலம் வந்த தயாரிப்பு நிறுவனம் தான் ஏவிஎம். 1958 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு புதுமைகளை நிகழ்த்திய நிறுவன். ஏவிஎம் தயாரிப்பில் இயக்கும் அனைத்துப் படங்களிலும் ஒவ்வொரு புதுமைகள் நிச்சயம் இருக்கும். புதுபுது கலைஞர்களைக் கூட எவ்வித தயக்கம் இன்றி இயக்கி தமிழ் சினிமாவில் பலருக்கும் முகவரியாக திகழ்ந்த பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோ.
தமிழ் சினிமாவையும் ஏவிஎம் ஸ்டுடியோவைவும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றிணைந்துள்ளது. ஏவி. மெய்யப்ப செட்டியார் காலத்தில் இருந்து அதாவது கருப்பு வெள்ளை காலம் முதல் தற்போதை டிஜிட்டல் தொழில்நுட்ப காலம் வரை தனக்குரிய நற்குணங்களைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை ஏவிஎம் நிறுவனம். கடந்த 75 ஆண்டுகளில் சுமார் 175 படங்களைத் தயாரித்து சாதனைப் பெற்றுள்ளது ஏவிஎம் ஸ்டுடியோ.
மேலும் படிக்க: 34 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் - மணிரத்னம்; ரஜினியின் அடுத்த பட அப்டேட் இதோ
ஏவிஎம் நிறுவனத்தில் நிறுவிய ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மறைவுக்குப் பின்னதாக அவருடைய மகன் ஏவிஎம் சரவணன் இந்நிறுவனத்தை வழிநடத்த தொடங்கினார். தன்னுடைய 18 ஆவது வயதில் ஏவிஎம்மில் காலடி பதித்த இவர் நிர்வாகம், படத்தயாரிப்பு, விநியோக உரிமை, திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது போன்ற அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி சாதனைப் படைத்தார் ஏவிஎம் சரவணன்.
மேலும் படிக்க: இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார், சூப்பர்ஸ்டார்... உச்ச நட்சத்திரங்கள் டைட்டில் கார்டு பயன்படுத்திய முதல் படம் ?
ஏவிஎம்மிற்குள் இவர் காலடி பதித்த நாளிலிருந்து காலத்தால் அழியாத பல திரைப்படங்களைத் தமிழ் திரையுலகிற்கு வழங்கினார் சரவணன். கடந்த 1958 ஆம் ஆண்டு மாமியார் மெச்சிய மருமகள் திரைப்படம் மூலம் ஆரம்பித்த இவரது பயணம் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளிலும் வெற்றி வாகை சூடியது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினிகாந்தின் முரட்டுக்காளை, மனிதன், முந்தானை முடிச்சு, மிஸ்டர் பாரத், எஜமான், சிவாஜி போன்ற திரைப்படங்களைத் தயாரித்தார் ஏவிஎம் சரவணன். தொடர்ச்சியாக ரஜினிக்கு பல ஹிட் படங்களைக் கொடுத்த சூப்பர் ஸ்டாரை உச்சத்திற்குக் கொண்டு வந்தார் ஏவிஎம் சரவணன்.
இதோடு மட்டுமின்றி நடிகர் கமல்ஹாசனுக்கு சகலகலா வல்லவன் போன்ற பல்வேறு திரைப்படங்களையும், பாட்டி சொல்லைத் தட்டாதே, மின்சாரக்கனவு, மின்சாரம், மாநகர காவல், புதுமைப்பெண், சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களைத் தயாரித்தார். புது முக கலைஞர்களாக இருந்தாலும், புதுமுக இயக்குநர்களாக இருந்தாலும் அனைவருக்கும் எவ்வித தயக்கம் இன்றி வாய்ப்பு அளித்த பெருமைக்குரியவர் ஏவிஎம் சரவணன்.
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வெள்ளை பேன்ட் வெள்ளை சர்ட் அணிந்து அமைதியாக பேசும் நபர் என்ற அடியாளத்தோடு வலம் வந்தவர். முன்னணி நடிகர்களுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்று தந்த பெருமை உள்ளிட்ட பெரிய பின்புலம் இருந்தும் வாழ்நாள் முழுவதும் எந்த இடத்திலும் அமைதியாகக் கைகளைக் கட்டி எளிமையாக வாழ்ந்தார்.
நேற்று அதாவது டிசம்பர் 3 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய ஏவிஎம் சரவணன் இன்று டிசம்பர் 4 ஆம் தேதி உடல் நல குறைபாடு காரணமாக தன்னுடைய 86 வயதில் உயிரிழ்ந்தார் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் அனைவரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதோடு சரிந்தது தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனம், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நபர், ஆழ்ந்த இரங்கல் என்பது போன்ற பல்வேறு கமெண்ட்டுகளை சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு தங்களுடைய அஞ்சலிளை ஏவிஎம் சரவணனுக்குத் தெரிவித்து வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com