உலகளவில் வெளியாகும் அனைத்து படங்களின் தகவல்களைச் சேமித்து வைத்திருக்கும் ஐ.எம்.டி.பி இணையதளம் நடப்பாண்டில் சினிமா ரசிகர்கள் விரும்பிய டாப் 10 படங்களில் பட்டியலை வெளியிட்டுள்ளது. படத்திற்கு ரசிகர்கள் வழங்கிய ரேட்டிங் அடிப்படையிலும், அளித்த வரவேற்பை பொறுத்தும் இந்தப் பட்டியல் தயாரிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓப்பன்ஹெய்மர்
Get your popcorn ready! The end of 2023 is upon us, and to celebrate a blockbuster year, we’re taking a look at the most popular movies among IMDb fans worldwide 🎞️ Catch the top ten movies below, and click to see the full list 👉 https://t.co/aWOjvzDvws
— IMDb (@IMDb) December 5, 2023
1. Oppenheimer:… pic.twitter.com/xvPpo5YsRF
எதிர்பார்த்தபடியே கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஜே.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. ஐ.எம்.டி.பி தளத்தின் அனைத்து காலத்திற்குமான டாப் 250 படங்களிலும் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இடம்பிடித்திருக்கிறது. பல ஆஸ்கர் விருதுகளையும் இந்தத் திரைப்படம் பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பார்பி
ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தை எதிர்த்து களமிறங்கிய பார்பி திரைப்படம் அமெரிக்க டாலர் மதிப்பில் 1.44 பில்லியன் வசூலை குவித்தது. பார்பி கதாபாத்திரத்தில் மார்கட் ராபி கலக்கி இருந்தார். ஓப்பன்ஹெய்மர், பார்பி திரைப்படம் வெளியாகி முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்துக் கொண்டிருந்தபோது இது பார்பிஹெம்யர் சகாப்தம் எனப் பலரும் பேசினர். அடுத்தடுத்த இடங்களை கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி பாகம் 3, தி லிட்டில் மெர்மெய்ட், ஜான் விக் பாகம் 4 ஆகிய படங்கள் பிடித்துள்ளன.
மேலும் படிங்கTop 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ
தி சூப்பர் மரியோ பிரதர்ஸ்
அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்த தி சூப்பர் மரியோ பிரதர்ஸ் திரைப்படம் உலகளவில் 1.36 பில்லியன் டாலர்கள் வசூல் ஈட்டியது. படத்தின் ஒவ்வொரு அனிமேஷன் காட்சியும் ரசிகர்களின் கண்களைக் கொள்ளையடித்தது. சூப்பர் மரியோ வீடியோ கேம் விளையாடும் அனைவருக்கும் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது.
மேலும் படிங்கKadhalikka Neramillai : மீண்டும் காதல் கதையில் ஜெயம் ரவி!
அடுத்தடுத்த இடங்களை Five Nights at Freddy’s, Spider-Man: Across the Spider-Verse, Killers of the Flower Moon, The Flash படங்கள் பிடித்துள்ளன.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation