இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்த வாரம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன் படங்கள் மட்டுமல்ல மற்றொரு நகைச்சுவை நடிகரான யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க படமும் வெளியாகிறது. ஜனநாயகன் படத்தில் விஜய் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் விஜய் கொடைக்கானலுக்கு சூட்டிங் சென்ற நிலையில் அவர் காக்கி சட்டை அணிந்தபடி சண்டையிடும் காட்சியின் புகைப்படம் கசிந்துள்ளது.
டிராகன் பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தில் இயக்குநராகவும், லவ் டுடே படத்தில் இயக்குநர் மற்றும் நடிகராகவும், டிராகன் படத்தில் ரக்கட் பாயாக தொடர்ந்து வெற்றிகளை கொடுத்த பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த ஆண்டு இன்னும் இரண்டு படங்கள் ரிலீசாகவுள்ளன. சில நாட்களுக்கு முன்பு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப், மமிதா பைஜு நடித்துள்ள டூட் திரைப்படத்தின் போஸ்டருடன் தீபாவளி வெளியீடு என அறிவித்தனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் செப்டம்பர் 18ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களே ஒரு வருடத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்ய தடுமாறும் காலத்தில் பிரதீப் ரங்கநாதன் மூன்று படங்களை ரிலீஸ் செய்கிறார்.
தீபாவளிக்கு ஏற்கெனவே சர்தார் 2, சூர்யா 45 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் பிரதீப் ரங்கநாதனும் தனது படத்தை ரிலீஸ் செய்து முன்னணி நடிகர்களுடன் போட்டியிட தயாராகிவிட்டார்.
From the Universe of #Benz 💥#BenzPoojai ♥️@offl_Lawrence sir @GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art @dhilipaction @PradeepBoopath2 @amudhanpriyan @sureshchandraa pic.twitter.com/ibVwJq0ifJ
— GSquad (@GSquadOffl) May 12, 2025
லோகேஷின் ஹீரோ அவதாரம்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோ ஆகிறார். கூலி பட பணிகள் முடிந்துவிட்டதால் லோகேஷ் கார்த்தியுடன் கைதி 2 தொடங்கும் முன்பாக இப்படத்தில் நடிக்கிறார். வரும் வாரத்தில் இப்படத்தின் சூட்டிங் தொடங்குகிறது.
ராகவா லாரன்ஸின் பென்ஸ்
லோகேஷ் கனகராஜின் எல்சியூ-வில் புதிய இணைப்பாக பென்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதை எழுதி கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மே 12ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் மாதவனும், மலையாள நடிகர் நிவின் பாலியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ராகவா லாரன்ஸின் பென்ஸ்
லோகேஷ் கனகராஜின் எல்சியூ-வில் புதிய இணைப்பாக பென்ஸ் திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதை எழுதி கொடுத்துள்ளார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மே 12ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இப்படத்தில் மாதவனும், மலையாள நடிகர் நிவின் பாலியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation