herzindagi
image

டிராகன் விமர்சனம் : பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு பிளாக்பஸ்டர்; அனுபாமா கலக்கல்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்துள்ள டிராகன் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். லவ் டுடே படத்திற்கு கிடைத்த வெற்றியை டிராகனில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக தக்க வைத்துக்கொண்டாரா ?
Editorial
Updated:- 2025-02-22, 11:40 IST

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டிராகன். இந்த படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், கயாது லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீசான டிராகன் படத்துடன் தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் வெளியாகியுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இதற்கு முன்பாக அசோக் செல்வன், ரித்திகா சிங் வைத்து ஓ மை கடவுளே என்ற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார்.

டிராகன் கதைச் சுருக்கம் : ஒரு தப்பு செய்து அதனால் வாழ்க்கை நல்லபடியாகவும் வெற்றிகரமாகவும் மாறும் என ஹீரோ ஹீரோயினிடம் தெரிந்துகொண்டு தவறு செய்கிறார். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க தான் செய்த தப்பை சரி செய்ய ஹீரோ நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே டிராகன் படத்தின் கதை

டிராகன் விமர்சனம்

அரியர் வைத்து ரவுடித்தனம் செய்து கொண்டு கல்லூரியில் கெத்தாக சுற்றுவது மாஸ் என நினைக்கும் பிரதீப் ரங்கநாதனை அனுபாமா காதலிக்கிறார். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நினைக்கும் போது பிரதீப் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என பிரிந்து செல்கிறார். தன்னுடைய தவறை உணர்ந்து சரி செய்யாமல் குறுக்கு வழியில் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கிறார் பிரதீப். பெற்றோர், முதலாளி எல்லோரையும் ஏமாற்றி உயரத்தை தொடுகிறார். எனினும் அது நீண்ட நாள் நிலைக்கவில்லை. கல்லூரி முதல்வரிடம் சிக்கி கொண்டு மன்னிப்பு கேட்டு கெஞ்சுகிறார். தப்பை சரி செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. எல்லாம் முடியும் நேரத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை மீண்டும் அவரை தப்பு செய்ய வைக்கிறது. முக்கியமான தருணத்தில் தப்பை ஒப்புக்கொண்டு அனைத்தையும் இழந்துவிடுகிறார். கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

டிராகன் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • கல்லூரி மாணவராகவும், ஐடி ஊழியராகவும் பிரதீப் ரங்கநாதன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவருக்கு என்றே அளவு எடுத்து சட்டை தையலிட்டது போல் கதாபாத்திர வடிவமைப்பு உள்ளது.
  • காதலில் அனுபாமாவும், கவர்ச்சியில் கயாது லோஹரும் கவர்கின்றனர். மிஷ்கின், ஜார்ஜ் மரியம், சித்து, ஹர்ஷத் கான், கெளதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிகுமார், கேமியோ ரோலில் வரும் இயக்குநரின் கதாபாத்திர வடிவமைப்பு கச்சிதம். அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர்.
  • இரண்டாம் பாதியில் குட்டி டிராகனாக ஹர்ஷத் கானின் சேட்டை நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.
  • காதலில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டால் எது நியாயமோ அதை செய்ய வேண்டும் என அழுத்தமாக சொன்ன இயக்குநருக்கு பாராட்டுகள்.
  • கதையில் தொய்வு என்பதே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன.
  • அரியர் வைத்து சுற்றுவது கெத்து என நினைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு புரியம்படி கலகலப்பான பாடம் எடுத்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.

மேலும் படிங்க  பாட்டில் ராதா விமர்சனம் : குடி குடியை கெடுக்கும் வாழ்க்கையை அழிக்கும்   

டிராகன் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • கெட்ட வார்த்தை பேசுவதை படத்தில் மிகவும் யதார்த்தமாக்கி விடுகின்றனர். இது தேவையற்றது. பீப் சாங் பாடலுக்கு வந்த எதிர்ப்பு எல்லாம் இப்போ எங்கே போனது எனத் தெரியவில்லை.
  • படத்தின் வேகத்தை பாடல்கள் குறைக்கவில்லை என்றாலும் ஓ மை கடவுளே படத்தின் பாடல்கள் போல டிராகன் பட பாடல்கள் நமது மனதில் நிற்கவில்லை.

டிராகன் ரேட்டிங் - 4/5

மற்றொருவரின் வாழ்க்கையை அழித்து தனிப்பட்ட முன்னேற்றம் அடைவதை பலரும் தெரிந்தும் தெரியாமலும் செய்து கொண்டிருக்கின்றனர். இதை மிகவும் அற்புதமாக சொல்லிய டிராகன் படக்குழுவுக்கு வாழ்த்துகள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com