herzindagi
image

பாட்டில் ராதா விமர்சனம் : குடி குடியை கெடுக்கும் வாழ்க்கையை அழிக்கும்

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளிவந்த பாட்டில் ராதா திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். குடிநோயாளிகளின் மறுவாழ்வை பற்றி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட ஒரு சில திரைப்படங்களில் பாட்டில் ராதாவும் ஒன்று.
Editorial
Updated:- 2025-02-15, 17:05 IST

தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்த பாட்டில் ராதா திரைப்படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. குடிநோயாளிகள் செய்யும் அட்டகாசம், குடிநோயாளிகளை குணப்படுத்தும் மறுவாழ்வு மையத்தை பற்றி ஆவணப்படத்தில் காமெடி, பாடல்கள் சேர்த்தால் அதுவே பாட்டில் ராதா திரைப்படம். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாட்டில் ராதா கதைச்சுருக்கம்

குடி பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடியின்றி வாழ முடியாத நிலையில் இருக்கும் நபர்களை குணப்படுத்த மறுவாழ்வு மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைமுறை குறித்து பாட்டில் ராதா எடுக்கப்பட்டுள்ளது.

பாட்டில் ராதா விமர்சனம்

கட்டட மேஸ்திரியான குரு சோமசுந்தரம் குடி இன்றி வாழ முடியாத நிலையில் வேலையை ஒழுங்காக செய்ய முடியாமல் தேவையில்லாத வம்பு சண்டைக்கு செல்கிறார். அவரது மனைவி சஞ்சனா நடராஜன் தன்னிடம் உள்ள நகைகளை விற்று மறுவாழ்வு மையத்தில் குரு சோமசுந்தரத்தை சேர்க்கிறார். கட்டுப்பாடுகளுடன் வாழ பிடிக்காமல் அங்கிருந்து சிலருடன் குரு சோமசுந்தரம் தப்பிவிடுகிறார். திருந்துவதற்கு வாய்ப்பு கிடைத்தும் மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறார். குடும்பமே அவரை விட்டு விலகிச் செல்கிறது. அதன் பிறகு திருந்தினாரா ? இல்லையா ? என்பதே பாட்டில் ராதா.

பாட்டில் ராதா பாஸிட்டிவ்ஸ்

  • குடிகார கணவனிடம் சிக்கி கொண்டு சிரமப்படும் மனைவி கதாபாத்திரத்தில் சஞ்சனா நடராஜனிடம் நடிப்பு அபாரம்.
  • ஜான் விஜய், லொள்ளு சபா மாறன் தங்களுகு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
  • ஷான் ரோல்டன் சோக காட்சிகளுக்கு கொடுத்திருக்கும் பின்னணி இசை, காயங்கள் பாடல் நன்றாக இருந்தது.
  • மறுவாழ்வு மையத்தில் குணப்படுத்துதல் என்ற பெயரில் அரங்கேறும் கொடுமைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
  • குடி பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒழுக்கம் அவசியம் என்பதை பல இடங்களில் பதிய வைத்துள்ளனர்.
  • வியாபார நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்படும் தமிழ் படங்களுக்கு மத்தியில் யாரும் எடுத்திராத கதைக்களத்தில் படம் இயக்கிய தினகரன் சிவலிங்கத்திற்கு வாழ்த்துகள்.

மேலும் படிங்க  குடும்பஸ்தன் விமர்சனம் : மிடில் கிளாஸ் ஆண்களின் வாழ்க்கையை பிரதிபலித்த மணிகண்டன்

பாட்டில் ராதா படத்தின் நெகட்டிவ்ஸ்

  • முடிந்த அளவு குடிநோயாளி கதாபாத்திரத்திற்கு நடிப்பால் வலு சேர்க்க குரு சோமசுந்தரம் முயற்சித்து இருக்கிறார்.
  • குடிக்கு அடிமையான சில கதாபாத்திரங்களின் மீது நமக்கு பரிதாபம் ஏற்படுகிறது. பாட்டில் ராதா கதாபாத்திரம் மீது அப்படி தோன்றவில்லை.
  • மறுவாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து மீண்டும் குடிக்க நினைக்கும் இடத்திலேயே பாட்டில் ராதா கதாபாத்திரத்தின் வாழ்க்கை முடிந்துவிட்டது எனத் தோன்றுகிறது. அதன் பிறகு சுமார் 45 நிமிடங்களுக்கு காட்சிகளை இழுத்துள்ளனர்.
  • 1.30 மணி நேரத்தில் சுருக்கமான படமாக எடுத்திருந்தால் பாட்டில் ராதா இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

ரேட்டிங் - 2.5 / 5

குடி பழக்கம் எங்கும் பரவி இருக்கிறது. குடிநோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ள இயக்குநருக்கு பாராட்டுகள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com