Ponniyin Selvan 2 : பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  தயாரிப்பு குழு இந்த சூப்பரான அப்டேட்டை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளது. 

ps release date update

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை 2 பாகங்களில் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த திடைப்படத்தின் முதல் பாகமான பொன்னியின் செல்வன் - 1 கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது. தமிழ், தெலுங்கு என மொத்த 5 மொழிகளில் பான் இந்தியா மூவியாக வெளியிட்டப்பட்டது. படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு படத்தை தூக்கி நிமிர செய்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த பாகத்திற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா படத்திற்கான புரமோஷன் வேலைகளையும் தொடங்கி விட்டது. முதல் பாகத்திற்கு படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் சென்னை, மும்பை, ஆந்திரா, கேரளா என பறந்து சென்று தொடர்ந்து புரமோஷன் பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2வது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவது வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ponniyin selvan video

அதுமட்டுமில்லை ரசிகர்களை கவரும் வகையில் புது கிளிம்ஸ் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. படத்தில் அருண்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, வந்திய தேவனாக நடிக்கும் கார்த்திக், ஆதித்யா கரிகாலன் விக்ரம் என அனைவரும் படத்தில் தங்களது கதாபாத்திரத்தை பற்றியும் படைப்பு குறித்தும் பேசுகின்றனர். இவர்களுடன் நடிகர் ஜெயராமும் இருக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்:கதையின் நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பயணம்!

பொன்னியின் செல்வன் படத்தின் இந்த கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் பாடம் 500 கோடி வசூலித்திருந்தது. இரண்டாம் பாகம் அதற்குமேல் தாண்டலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 தேதிக்காக பொன்னியின் செல்வன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP