herzindagi
image

மீண்டும் பிச்சைக்காரன் ? ஜெயிலர் 2ல் சந்தானம், ரெட்ரோ ஓடிடி ரிலீஸ், மாமன் சூரி உருக்கம்

வாரத்தின் தொடக்கத்திலேயே அடுக்கடுக்கான தமிழ் சினிமா அப்டேட்கள் கிடைத்துள்ளன. வெற்றிக் கூட்டணியான பிச்சைக்காரன் பட இயக்குநர் சசி - நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்திற்காக இணைகின்றனர். சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் மே 31ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Editorial
Updated:- 2025-05-26, 20:11 IST

கோடை விடுமுறை முடிவடையும் தருவாயிலும் கூட தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல அப்டேட்கள் கிடைக்கின்றன. விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இன்னும் 10 நாட்கள் இடைவெளியில் கமல்ஹாசனின் தக் ஃலைப் படம் வெளியாகிறது. மீண்டும் பிச்சைக்காரன் ? ஜெயிலர் 2ல் சந்தானம், ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் என திரையுலக அப்டேட்கள் கிடைத்துள்ளன

சசி - விஜய் ஆண்டனி கூட்டணி 

2016ல் இயக்குநர் சசி - நடிகர் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் பிச்சைக்காரன் வசூலை குவித்தது. இதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே இயக்கினார். அப்படம் தோல்வியை தழுவிய நிலையில் இயக்குநர் சசி - விஜய் ஆண்டனி 9 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்திற்காக இணைகின்றனர். திஷன், லப்பர் பந்து சுவாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். 

ஜெயிலர் 2ல் சந்தானம்

ஜெயிலர் 2 படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தானத்திடம் இயக்குநர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருப்பதாக கூறப்படுகிறது. யோகி பாபுவுக்கு பதிலாக சந்தானம் இடம்பெறுவாரா ? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. நகைச்சுவை கதாபாத்திரங்களை சந்தானம் தவிர்த்து வந்த நிலையில் தற்போது சிம்பு படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

ரெட்ரோ ஓடிடி ரிலீஸ் - நெட்பிளிக்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ திரைப்படம் ஓடிடி தளத்தில் மே 31ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படத்தை காணலாம். ரெட்ரோ படம் திரையரங்க வெளியீடு, ஓடிடி - டிவி விற்பனை மூலம் ஒட்டுமொத்தமாக 235 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

மாமன் சூரி உருக்கம் 

மாமன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படும் நிலையில் நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த உணர்வுகளை என் இயக்குனர் மிக நுட்பமாக உணர்ந்து, ஆழ்ந்த அக்கறையுடனும் முழு அர்ப்பணிப்போடும் எடுத்துக் கொண்டு, அதை உயிரோட்டமுள்ள திரைப்படமாக மாற்றியதற்கு என் மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com