திரையரங்குகளில் சென்று படம் பார்க்க ஒரு கூட்டம் விரும்பினாலும், வீட்டிலேயே குடும்பத்துடன் இரவு நேரங்களில் படம் பார்க்கவும் சிலர் விரும்புகின்றனர். அப்படிப்பட்டவர்கள் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் எந்த புதிய படம் ரிலீஸ் ஆனாலும் பார்த்து என்ஜாய் செய்கின்றனர்.இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்ன படங்கள் ரிலீஸாகிறது என்பதை பார்க்கலாம்.
சைக்கலாஜிக்கல் த்ரில்லராக திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற அஸ்வின்ஸ் திரைப்படத்தில் வசந்த் ரவி, விமலா ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படம் ஜூலை 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : சாக்ஷி அகர்வாலின் பர்த்டே ஸ்பெஷல் போட்டோ ஷூட்!
வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகிவுள்ள பவால் திரைப்படம் அமேசான் பிரைமில் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தே கிளோண்டு டைரோன் படம் ஒரு அமெரிக்கன் சயன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமாகும். இந்த திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகிறது.
ஸ்பானிஷ் திரைப்படமான ‘தி ஆல்மோஸ்ட் லெஜண்ட்ஸ்’ ஒரு காமெடி திரைப்படமாகும். இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிவுள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com