herzindagi
image

பணி விமர்சனம் : இயக்குநராக ஜோஜு ஜார்ஜ் மிரட்டினாரா ? படம் எப்படி இருக்கு ?

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் வெளிவந்த பணி திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். மலையாள கிரைம், த்ரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்காக இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-01-18, 11:27 IST

இரட்டா, ஜகமே தந்திரம், ரெட்ரோ படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். இவர் முதல் முறையாக மலையாள சினிமாவில் இயக்கிய படம் பணி. இந்த படம் அக்டோபர் 24ஆம் தேதி, 2024ஆம் ஆண்டு வெளியானது. சாகர் சூரியா, மெர்லெட் தாமஸ், நாடோடிகள் அபிநயா, பாபி குரியன், சந்தினி ஸ்ரீதரன், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் பணி படத்தில் நடித்துள்ளனர். சோனி லைவ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. திரையரங்க வெளியீட்டின் போது கிடைக்காத வரவேற்பை ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ், விஷ்ணு விஜய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். பணி திரைப்படத்தின் விமர்சனம் இங்கே...

பணி கதைச் சுருக்கம்

திருச்சூரை கட்டுக்குள் வைத்திருக்கும் ரவுடி கும்பலுக்கும் இரண்டு கூலிப்படை இளைஞர்களுக்கும் இடையே நடக்கும் பழிவாங்கலே பணி படத்தின் ஒன் லைன்.

பணி விமர்சனம்

ஜோஜு ஜார்ஜ், பாபி குரியன், சுஜித் சங்கர் சட்டத்திற்கு புறம்பாக கட்ட பஞ்சாயத்து வேலை செய்து வருகின்றனர். ஒட்டுமொத்த திருச்சூரையும் இவர்கள் கட்டுக்குள் வைத்துகின்றனர். திருச்சூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்கும் அதிகாரி ஜோஜு ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்களை கட்டுப்படுத்த நினைக்கிறார். இதனிடையே கூலிப்படை இளைஞர்களான சாகர் சூர்யா, ஜுனைஸ் ஜோஜு ஜார்ஜிடம் மோதி உதைபடுகின்றனர். கூலிப்படை இளைஞர்களின் பழிவாங்கல் செயல்கள் ஜோஜு ஜார்ஜ்ஜை உச்சக்கட்ட கோவத்திற்கு கொண்டு செல்கிறது. இரண்டு பேரையும் ஜோஜு ஜார்ஜ் கண்டுபிடித்து என்ன செய்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்துள்ளனர்.

பணி படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • அபிநயா, பாபி குரியன், சந்தினி ஸ்ரீதரன், மெர்லெட் தாமஸ், சுஜித் சங்கர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர்.
  • கூலிப்படை இளைஞர்களாக சாகர் சூர்யா, ஜுனைஸ் நடிப்பு மொத்த படத்திற்கும் போனஸ்.
  • இரண்டாம் பாதியில் படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது.
  • எதிர்பார்த்த கிளைமேக்ஸ் என்றாலும் திரையில் காட்சிப்படுத்திய விதம் அற்புதம்.

மேலும் படிங்க  அஜித்தின் விடாமுயற்சி பிப்.6ஆம் தேதி ரிலீஸ்; ட்ரெய்லரில் தெறிக்கவிட்ட அனிருத்

பணி படத்தின் நெகட்டிவ்ஸ்

  • ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய ரவுடி, தாதா போல் வர்ணிக்கப்பட்டாலும் இரண்டாம் பாதி வரை ரசிகர்களிடம் அது பிரதிபலிக்கவில்லை.
  • நல்ல ஒன் லைன் கதையை விரிவுப்படுத்த தெரியாமல் கொஞ்சம் சொதப்பி விட்டனர் என்றே சொல்லலாம்.
  • படத்தின் நீளத்தை 2 மணி நேரமாக குறைத்திருந்தால் இன்னும் கூட சுவாரஸ்யமாக தெரிந்திருக்கும்.
  • கொலை நடக்கும் பொது இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை என காவல்துறையே சொல்வது லாஜிக் ஓட்டை.

பணி ரேட்டிங் - 2.75/5

வேட்டையாடு விளையாடு போல் படம் எடுக்க முயற்சித்து ஹீரோ கதாபாத்திரத்திற்கு அழுத்தம் கொடுக்க தவறியதால் ஜோஜு ஜார்ஜின் பணி ஆவரேஜ் படமாக அமைந்துவிடுகிறது. வார விடுமுறையில் இந்த படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com