herzindagi
image

அகத்தியா விமர்சனம் : இது பேய் படமா ? இல்ல ஜீவா, ராஷி கண்ணாவின் சித்த மருத்துவ பாடம்

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, ராஷி கண்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள அகத்தியா படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். சித்த மருத்துவம் பற்றி அறியப்படாத விஷயங்களை சொன்ன பா.விஜய்க்கு பாராட்டுகள்.
Editorial
Updated:- 2025-03-08, 14:35 IST

பா.விஜய் கதை, திரைக்கதை எழுதி ஜீவா, ராஷி கண்ணா நடித்துள்ள திரைப்படம் அகத்தியா. பா.விஜய் - யுவன் சங்கர் ராஜா - ஜீவா கூட்டணியில் தொடங்கப்பட்ட படம் மேதாவி. தவிர்க்க முடியாத காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டு அகத்தியா படம் எடுக்கப்பட்டது. இதுவும் சமீபத்தில் எடுக்கப்பட்ட படம் அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்னேர முடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அகத்தியா படம் திரையரங்குகளில் வெளியானது. ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதா ரவி, ரோகினி, சார்லி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அகத்தியா திரைப்படம் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமைந்ததா என்பதையும் பார்க்கலாம்.

அகத்தியா கதைச் சுருக்கம் 

1940களில் எலும்பு புற்றுநோய்க்கு சித்த மருந்து கண்டுபிடிக்கும் அர்ஜுனை பிரெஞ்ச் அதிகாரி கொன்றுவிடுகிறார். 80 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மருந்தினை இறைவனின் அருளால் அமானுஷ்யங் சக்திகளை முறியடித்து தனது தாயின் தேவைக்காக தேடி செல்கிறார் ஜீவா. அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா என்பதே அகத்தியா.

அகத்தியா விமர்சனம்

திரைப்படம் எடுக்கும் ஆசையில் பாண்டிச்சேரியில் சூட்டிங் தொடங்கும் ஜீவா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சூட்டிங் பங்களாவை பேய் வீடாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார். நிஜத்திலும் அங்கு அமானுஷ்ய சக்திகள் உள்ளன. ஒரு கட்டத்தில் தனது தாயின் தேவைக்காக பங்களாவின் இரகசியங்களை கண்டுபிடிக்க ஆரம்பிக்கிறார். அப்போது அர்ஜுன், பிரெஞ்ச் அதிகாரி இடையிலான மோதலை கண்டுபிடிக்கிறார். அர்ஜுனின் சித்த மருந்தினால் எலும்பு புற்றுநோயை தீர்க்க முடியும் என புரிந்துகொண்டு தேடுதலை துரிதப்படுகிறார். ஒட்டுமொத்தத்தில் இது பேய் படமல்ல சித்த மருத்துவம் பற்றி தெரியாவர்களுக்கு சொல்லப்பட்ட 2 மணி நேர பாடம். 

அகத்தியா படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • படத்தில் ஜீவாவின் கதாபாத்திரத்தை விட அர்ஜுன் கதாபாத்திரத்திற்கே வலு அதிகம். ஜீவா ரொம்பவும் மெனக்கெடாமல் யதார்த்தமாக நடித்துள்ளார். ராஷி கண்ணா அழகில் வசீகரிக்கிறார்.
  • அகத்தியா படத்தின் கதையே ஹீரோ என்று சொல்லலாம். ஹீரோ கதாபாத்திரத்திற்காக மாஸ் காட்சிகள், ஹீரோ ஹீரோயின் காதல் பாடல்கள் என கதைக்கு தேவையில்லாத எதையும் சேர்க்கவில்லை.
  • சித்த மருத்துவம் பற்றி பல அறியப்படாத விஷயங்களை இயக்குநர் பா.விஜய் சொல்லியுள்ளார்.
  • ஆங்காங்கே வரும் டைமிங் காமெடி ரசிக்கும்படி இருந்தது. பாடல்கள் படத்தின் வேகத்தை குறைக்கவில்லை.
  • அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்து இரகசியங்களை கண்டறியவும் விதம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது.

மேலும் படிங்க  டிராகன் விமர்சனம் : பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு பிளாக்பஸ்டர்; அனுபாமா கலக்கல்

அகத்தியா படத்தின் நெகட்டிவ்ஸ்

  • வெளிநாடு வில்லனின் கதாபாத்திர வடிவமைப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
  • இயக்குநர் ஒரு சில விஷயங்களை வேண்டுமென்றே படத்தில் திணித்தது போல் இருந்தது.
  • பெரும்பாலும் செட் போட்டே படத்தை எடுத்துள்ளனர். பல காட்சிகளில் அது அப்பட்டமாகத் தெரிகிறது.
  • ஜீவா - ரோகிணி சென்டிமென்ட், அர்ஜுன் - வெளிநாட்டு பெண் காதல் துளியும் எடுபடவில்லை.
  • பேய் படம் போல் ஆரம்பித்த அகத்தியா திடீரென சித்த மருத்துவ ரூட் எடுத்துவிட்டது.  
  • கிளைமேக்ஸ் அனிமேஷன் காட்சி வீடியோ கேம் பார்ப்பது போல இருந்தது.   

படத்தின் ரேட்டிங் - 2.75 / 5

அழுத்தமான திரைக்கதையும், வலுவான கதாபாத்திர வடிமைப்பையும் பூர்த்தி செய்திருந்தால் அகத்தியா சொல்ல வந்த செய்தி பெரிதளவில் பேசப்பட்டு இருக்கும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com