herzindagi
image

"டிராகன் வெற்றி" ரஜினியின் வார்த்தையால் கண் கலங்கிய அஷ்வத் மாரிமுத்து

டிராகன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதன் மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
Editorial
Updated:- 2025-03-05, 14:57 IST

2025ல் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது அஷ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளிவந்த டிராகன் திரைப்படம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி ரசிகர்களுக்கே திருப்தி அளிக்காமல் சொதப்பிய நிலையில் 15 நாள் இடைவெளியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளது. தெலுங்கிலும் டிராகன் படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

ரஜினிகாந்துடன் அஷ்வத் சந்திப்பு

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளை பாராட்டக் கூடியவர் ரஜினிகாந்த். தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை புகழ்ந்து அறிக்கை வெளியிடுவதோடு படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்துவார். கடந்த 21ஆம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இதையடுத்து டிராகன் படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 

இயக்குநர் அஷ்வத்தின் உருக்கமான பதிவு 

நல்ல படம் எடுக்கணும், அந்த படத்தை ரஜினி சார் பார்த்துவிட்டு வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்தி படத்தை பற்றி அவர் பேசணும், இயக்குநராக நினைத்திடும் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒவ்வொரு துணை இயக்குநரின் கனவு. அந்த கனவு நிறைவேறிய நாள் இன்று என அஷ்வத் பதிவிட்டுள்ளார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைலில் என்ன மாதிரியான திரைக்கதை அஷ்வத், அற்புதம் அற்புதம் என பாராட்டியாக குறிப்பிட்டுள்ளார்.

தலைவரின் சிகரெட் ஸ்டைல் - பிரதீப் 

இந்த சந்திப்பின் போது பிரதீப் ரங்கநாதன், படத்தின் தயாரிப்பாளர் உடனிருந்தனர். அவர்களும் சூப்பர்ஸ்டாருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். மேலும் பிரதீப்பின் வேண்டுகோளுக்கு இணங்க சூப்பர்ஸ்டார் சிகரெட் ஸ்டைல் செய்து காண்பித்துள்ளார். இதற்கு பிரதீப் ரங்கநாதன் கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். 

மேலும் படிங்க  குட் பேட் அக்லி டீஸர் : தீனா, அமர்க்களம், பில்லா அஜித் படங்களின் மேஷ் அப்; கலக்கு கலக்கிய ஆதிக்

டிராகன் படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடி ஆவார். இந்த படமும் வெற்றி பெற்றால் பிரதீப் ரங்கநாதனுக்கு லவ் டுடே, டிராகன் வரிசையில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஹாட் ரிக் வெற்றியாக அமையும். அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்குகிறார். அஷ்வத் மாரிமுத்துவிற்கு அது மூன்றாவது இயக்கமாகும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com