கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களால் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியவர் நெல்சன் திலீப்குமார். விஜய்யை வைத்து இவர் இயக்கிய பீஸ்ட் படம் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நெல்சனை நம்பி களம் இறங்க முடிவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மீண்டும் கம்பேக் கொடுக்க முடிவு செய்த நெல்சன், கதையில் அதிகம் கவனம் செலுத்தி ரஜினிகாந்துக்கு எழுதிய ஸ்கிரிப் தான் ஜெயிலர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கடந்தாண்டு ஃபர்ஸ்ட் லுக் பிரம்மாண்டமாக வெளியானது.
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் படத்தில் தேதி ஆகஸ்ட் 10 என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘Kaavaalaa’ பாடல் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை வழக்கம் போல் தன்னுடைய ஸ்டைலில் புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளார் நெல்சன். அனிருத் ஸ்ட்டியோவுக்கு சென்று நக்கல் செய்து, பாடலை கெஞ்சி கேட்காத குறையாக, நெல்சன் போராடுவது போல் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ரஜினியின் பேட்ட படத்தில் அனிருத் இசையமைத்திருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation