தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் தொடங்கப்படுவதால் சினிமா ரசிகர்களிடம் பகிர்வதற்கு அப்டேட் பஞ்சம் கிடையாது. சூப்பர்ஸ்டார் ரஜினியின் மாபெரும் வெற்றி படமான ஜெயிலரின் இரண்டாம் பாகம் சென்னையில் தொடங்கியுள்ளது. கார்த்தியின் சர்தார் 2 பட சூட்டிங்குடன் டப்பிங் பணிகளிலும் படக்குழு முனைப்பு காட்டி வருகிறது. நாடோடிகள், ஈசன் புகழ் அபிநயா தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடலுக்கு ஓஜி சம்பவம் என ஜீ.வி.பிரகாஷ் பெயர் வைத்துள்ளார். ஓடிசாவில் நடக்கும் ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் சூட்டிங் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2023ல் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஜெயிலர் 2 சூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த கதாபாத்திரங்களுடன் கூடுதலாக சில பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். தெலுங்கு நடிகர் பாலய்யா இப்படத்தில் தோன்றுவார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
நாடோடிகள், ஈசன், மார்க் ஆண்டனி, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்த அபிநயா இன்ஸ்டா பக்கத்தில் நிச்சய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு நேர்காணலில் 15 வருட காதல் குறித்து பகிர்ந்திருந்தார். காதலனின் முகத்தை இன்னும் இரகசியமாகவே வைத்திருக்கிறார் அபிநயா. மூக்குத்தி அம்மன் 2 படத்தில் இவரும் நடிக்கிறார்.
மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தின் சூட்டிங்கோடு டப்பிங் பணிகளும் முழு வீச்சில் நடைபெறுகிறது. படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
குட் பேட் அக்லி படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் விரைவில் படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரிஜினல் கேங்ஸ்டர் என்பதை சுருக்கி ஓ.ஜி என தலைப்பு வைத்துள்ளார் இசைமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். கூடுதல் தகவலாக ஏப்ரல் 9ஆம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிங்க அகத்தியா விமர்சனம் : இது பேய் படமா ? இல்ல ஜீவா, ராஷி கண்ணாவின் சித்த மருத்துவ பாடம்
#Sardar2 - dubbing begins with an auspicious pooja.
— Prince Pictures (@Prince_Pictures) March 10, 2025
Produced by @lakku76 and
Co-produced by @venkatavmedia@Karthi_Offl @iam_SJSuryah @Psmithran @MalavikaM_ @AshikaRanganath @rajishavijayan @thisisysr @george_dop @rajeevan69 @dhilipaction @editorvijay @paalpandicinema… pic.twitter.com/2PUPZdzKcA
OG Sambavam —- GBU track 1 name …Cookinggggggggg #OGSambavam #GBU koluthurom maaamey 🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) March 9, 2025
ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி மகேஷ் பாபுவுடன் ஒரு வித்தியாசமான கதைக்களத்திற்காக இணைந்துள்ளார். ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் வில்லன் பிரித்விராஜ் எனக் கூறப்படுகிறது. ஓடிசாவில் நடைபெறும் சூட்டிங்கின் சில காட்சிகள் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com