சூர்யா பிறந்தநாளில் கருப்பு டீஸர், இட்லி கடை முதல் பாடல், காந்தாரா சூட்டிங் நிறைவு... இந்த வார சினிமா

வாரத்தின் தொடக்கத்திலேயே சூர்யாவின் கருப்பு டீஸர், தனுஷின் இட்லி கடை முதல் பாடல் ரிலீஸ், ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சூட்டிங் நிறைவு என சுடச் சுட அப்டேட்கள் கிடைத்துள்ளன.
image

இந்த வாரம் விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி, பஹத் பாசில் - வடிவேலுவின் மாரீசன், பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு என பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகின்றன. ஜூலை 22ஆம் தேதி கூலி படத்தில் இருந்து பவர் ஹவுஸ் பாடல் வெளியாகிறது. நடிகர்கள் சூர்யா, தனுஷும் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். எனவே இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஒவ்வொரு அப்டேட் ஆக இந்த பதிவில் பார்ப்போம்.

சூர்யா பிறந்தநாளில் கருப்பு டீஸர்

நடிகர் சூர்யா தனது 50வது பிறந்தநாளை வரும் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள கருப்பு படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. படத்தில் திரிஷா, சிவதா, சுவாசிகா, அனகா ரவி, சதுரங்க வேட்டை நட்ராஜ் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கருப்பு வராந் வழி மறிக்காதே என டீஸர் போஸ்டர் பகிர்ந்துள்ளனர். தீபாவளி வெளியீடுக்கு கருப்பு படம் தயாராகி வருவதால் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படம் பண்டிகை வெளியீட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது.

தனுஷ் பிறந்தநாளில் இட்லி கடை பாடல்

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் முதல் பாடல் அவருடைய பிறந்தநாளான ஜூலை 27ஆம் தேதியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. திருவிழா பின்னணியில் இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது. அருண் விஜய், ராஜ் கிரண், நித்யா மேனன் இட்லி கடை படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லியுடன் மோத வேண்டிய இட்லி கடை தற்போது அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

காந்தாரா மேக்கிங் வீடியோ

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் 2022ல் வெளிவந்து 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த பட்ம காந்தாரா. படத்திற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்படுகின்றன. இப்போது காந்தாரா பார்ட் 1 படத்தின் சூட்டிங் நிறைவுபெற்றுள்ளதாக படக்குழு மேக்கிங் வீடியோ பகிர்ந்துள்ளது. 2 வருட கடின உழைப்பில் படம் தயாராகி உள்ளதாக ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி காந்தாரா பார்ட் 1 வெளியாகிறது.

மோகன்ராஜ் குடும்பத்திற்கு சிம்பு நிதியுதவி

வேட்டுவம் படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த நிலையில் அவருடைய குடும்பத்திற்கு நடிகர் சிம்பு தரப்பில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சிம்புவின் செயலை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP