லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் எதிர்நோக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்ல தெலுங்கு பேசும் மாநிலங்கள், கர்நாடகா, வெளிநாடுகளிலும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி கூலி படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ள நிலையில் படக்குழு இசை வெளியீட்டு விழாவையும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 50 வருட திரையுலக பயணத்தையும் ஒன்றாக நடத்த திட்டமிட்டுள்ளது. யூடியூப் நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த சில தகவல்களை பார்ப்போம்.
ரஜினியின் படம் என்பதால் அவரது ரசிகர்களுக்கு ஏற்ப சண்டை காட்சிகளில் சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கூலியில் வன்முறை காட்சிகளுக்கு சமரசம் காட்டவில்லை. இது என்னுடைய படமாகவே இருக்கும். ஆனால் எனது முந்தைய படங்கள் போல் துப்பாக்கி, போதைப் பொருள், குடோன் காட்சிகள் இருக்காது. கூலி படம் நல்ல படமா ? ரஜினிகாந்த் படமா ? வசூல் மழை பொழியும் ரஜினி படமா ? என்றால் நல்ல படமாக இருந்தால் மற்ற கேள்விகளும் அடங்கிவிடும் என லோகஷ் கூறினார்.
ரட்சகன் படம் பார்த்த பிறகு நாகர்ஜுனா போல ஃபங்க் ஹேர் ஸ்டைல் வைத்தேன். முதலில் கூலியில் அவரது கதாபாத்திரம் பற்றி சொன்ன போது 40 ஆண்டு திரையுலக பயணத்தில் இப்படி நடித்ததில்லை என தயங்கினார். ஆறு - ஏழு முறை விவரித்த பிறகு ஒப்புக்கொண்டார். படத்தில் செளபின், நாகர்ஜுனா வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமீர் கான் கதை சொல்லும் முன்பே ஓகே சொல்லிவிட்டார். ரஜினி சாருக்காக நடிப்பேன் என்றார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக கேட்டு நடிப்பார். அவருடைய திருப்திக்காக காட்சிகளுக்கு ஒன்ஸ் மோர் கேட்டும் அமீர் கான் நடித்ததாகவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம் போல் உங்களுடைய அடுத்தடுத்த படங்களில் அப்படியான கதாபாத்திரங்களை எதிர்பார்க்கலாமா ? எல்சியு-ல் லேடி சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தை வைத்து கதை எழுதியுள்ளேன். 2-3 சூப்பர்ஹீரோயின் கதாபாத்திரங்கள் இருக்கும். கைதி இரண்டாம் பாகத்தில் அதற்கான அப்டேட் கிடைக்கும் எனவும் லோகேஷ் கூறினார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com