தமிழ் திரையுலகில் பல படங்கள் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த இருபெரும் ஜாம்பவான்களான சரோஜா தேவி, கோட்டா ஸ்ரீனிவாஸ் ராவ் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா 200 வருடங்களை கடந்தாலும் இருவரின் நடிப்பு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். வாருங்கள் இந்த வார சினிமா அப்டேட்களை பார்ப்போம்.
விஷாலின் புதிய பட பூஜை சென்னையில் நடைபெற்றது. ஈட்டி, அயங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு 99வது படமாகும்.
மாமன்னன் படத்திற்கு பிறகு பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்கும் மாரீசன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அல்சைமர் பாதிப்புடைய வடிவேலுவிடம் இருந்து பஹத் பாசில் எப்படி பணத்தை கொள்ளையடிக்கிறார் என்பது போல் ட்ரெய்லர் காட்சிகள் உள்ளன. வரும் ஜூலை 25ஆம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கதாநாயகன்களில் ஒருவரான கவினின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தண்டட்டி இயக்குநர் ராம் சங்கையாவுடன் கவின் இணைகிறார். ஸ்டார், பிளெடி பெக்கர் படங்களின் தோல்வியில் இருந்து மீள்வதற்கு கவினுக்கு இது நல்ல வாய்ப்பாகும்.
நாகையில் நடந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்ததையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா நடிக்கும் வேட்டுவம் படத்தின் சூட்டிங் நாகையில் நடந்துள்ளது. கார் சேஸிங் காட்சியின் போது எதிர்பாராதவிதமாக மோகன்ராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் சூட்டிங் நடத்தியதாக ரஞ்சித் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
மகாராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த நித்திலன் சுவாமிநாதன் சூப்பர்ஸ்டாரின் கதை சொல்லியதாகவும் கதை பிடித்துப்போக அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் ஜெயிலர் 2 படம் முடிந்தவுடன் நித்திலன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் தொடங்கும் என கூறப்படுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com