
அரசியலில் முழு வீச்சில் களமாடும் முன்பாக விஜய் ஹெச்.விநோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டு இருக்கிறார். படத்தின் பூஜை அக்டோபர் 4ஆம் தேதி முடிந்து அக்டோபர் 5ஆம் தேதி முதல் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். பிரேமலு மமிதா பைஜு, பாபி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் தளபதி 69 திரைப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வலுத்துள்ளது.
அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலய்யா, காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார், ஜான் விஜய் நடித்து 2023ல் வெளியான படம் பகவந்த் கேசரி. சரக்குமாரின் ஆசைப்படி ஸ்ரீலீலாவை இந்திய ராணுவத்திற்கு அனுப்ப பாலய்யா முயற்சிப்பார். ராணுவத்தின் மீது துளியும் விருப்பம் இல்லாத ஸ்ரீலீலா பாலய்யாவை ஏமாற்றி கொண்டே இருப்பார். காதல் திருமணத்திற்கு பாலய்யா தடை போட ஸ்ரீலீலா அவரை விட்டு விலக முயற்சித்து எதிர்பாராதவிதமாக வில்லன்களிடம் சிக்கி கொள்வார். ஸ்ரீலீலாவை துரத்தும் வில்லனுக்கும் தனக்குமிடையே உள்ள முன்பகையை தீர்த்துக்கொள்ள பாலய்யா ஒன் மேன் ஆர்மியாக மாறுவார். முன்பகையை பாலய்யா தீர்த்துக் கொண்டாரா ? ஸ்ரீலீலா ராணுவத்திற்கு தேர்வானாரா என்பதே பகவந்த் கேசரியின் கதை. பகவந்த் கேசரி படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
Halamithi and Habibo reunited ☺️🤜🏼🤛🏼
— Pooja Hegde (@hegdepooja) October 4, 2024
Back again with the cutest @actorvijay sir and ready to roll 🤍
Let's create magic onscreen once more...
May the cinematic Gods keep shining upon us ❤️🙏🏻#thalapathy69 #onelasttime#Hvinoth @KvnProductions #BobbyDeol pic.twitter.com/qjZHd9AXrX
பாலய்யா கதாபாத்திரத்தில் விஜய்யும், காஜல் அகர்வால் ரோலில் பூஜா ஹெக்டேவும், ஸ்ரீலீலா ரோலில் மமிதா பைஜுவும் நடிப்பதாக கூறப்படுகிறது. படத்தில் புதிதாக இணைந்துள்ள டீஜே அருணாச்சலம் மமிதா பைஜுவின் காதலன் ரோலில் நடிக்கவுள்ளார். பகவந்த் கேசரியிலும் ஸ்ரீலீலாவிற்கு காதல் ஜோடி இருக்கும். சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தின் இடைவேளை காட்சியும் பகவந்த் கேசரியுடன் முற்றிலும் ஒத்துப்போவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பெண் உரிமை, பாலின பாகுபாடு, பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வசனங்கள் இருக்கும். சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் பகவந்த் கேசரியுடன் ஒத்துப்போகிறது.
மேலும் படிங்க GOAT Review : கமர்ஷியல் கிங் என நிரூபித்த விஜய்! "கோட்" ரசிகர்களுக்கான ட்ரீட்... லாஜிக்கில் சொதப்பிய வெங்கட் பிரபு...
விஜய்யின் எண்ணற்ற பெண் ரசிகர்களுக்கு இந்த படம் ரீமேக் ஆக இருந்தாலும் கட்டாயம் பிடிக்கும். நேர்கொண்ட பார்வை போல் ஹெச்.விநோத் தளபதி 69 படத்தை பக்காவாக ரீமேக் செய்து கொடுத்தால் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இது பெரிதும் உதவும்.
தமிழ் சினிமா தகவல்களுக்கு ஹெர் ஹிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com