
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தையொட்டி வெளியான நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் அவரது ரசிகர்களுக்கும், கமர்சியல் சினிமாவை விரும்பும் நபர்களுக்கும் பிடித்ததாக அமைந்துள்ளது. ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியான கோட் வசூலிலும் சாதனை புரிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேடஸ்டட் ஆஃப் ஆல் டைம் “கோட்” படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜெயராம், பிரஷாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், யோகி பாபு, பார்வதி நாயர், கனிகா, சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா என பெரும் பட்டாளம் கோட் படத்தில் நடித்துள்ளது.

பெற்றெடுத்த தந்தை செய்த தவறினால் வளர்ப்பு தந்தை சொல்வதை கேட்டு இளம் விஜய் வளர்கிறார். வளர்ப்பு தந்தையின் தூண்டுதலால் பெற்றெடுத்த தந்தையை கொலை செய்ய நினைக்கிறார். மகனின் திட்டங்களை எவ்வாறு தளபதி (தந்தை) விஜய் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை.
படத்தின் கிரிக்கெட் காட்சிகள் ஐபிஎல் ரசிகர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முதலில் 43 லீக் மேட்ச் என காட்டப்படுகிறது. அதன் பிறகு ஐபிஎல் லீக் 2024, 2023 என பழைய சீசன் ஸ்கோர் கார்டு மற்றும் வீடியோவை தப்புத் தப்பாக ஒட்டி வெட்டியுள்ளனர். வர்ணனையில் அரையிறுதிபோட்டி நடைபெறுகிறது என மீண்டும் குழப்புகின்றனர். மும்பை இந்தியன்ஸுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டன். ஆனால் ரோகித் சர்மாவை காண்பிக்கின்றனர். தோனி 2022ல் ஜெய்தேவ் உனட்கட் வீசிய பந்தை சிக்ஸருக்கு விரட்டும் காட்சியும், 2024ல் ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தை சிக்ஸருக்கு பறக்கவிடும் காட்சியும் தவறாக ஒட்டி இணைத்துள்ளனர். வீரர்கள் அறையிலேயே வெடிகுண்டு வைக்கமுடியும் என்பது மிகப்பெரிய சொதப்பல்.
இரண்டாம் பாகத்திற்கான லீட் தேவையற்ற வேலை...
வலுவான திரைக்கதை இல்லை என்றாலும் கோட் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. தெறி படத்திற்கு பிறகு விஜய் நல்ல கமர்ஷியல் படத்தில் நடித்துள்ளார்.
ரேட்டிங் - 3.5/5
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com