
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியது. குழந்தைகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையைக் கொண்டாடிவருகின்றனர். அனைத்துத் தேவாலயங்களிலும் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் கிப்ட் கொடுத்து கொண்டாடுவது வழக்கம். மாத கடைசி என்பதால் உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றாலும் பரவாயில்லை. இதோ பட்ஜெட் விலையில் உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு என்னென்ன கிப்ட் கொடுக்கலாம்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களது மொபைலில் டிஜிட்டல் பரிசுகளைக் கொடுக்கலாம். அது என்ன டிஜிட்டல் பரிசு என்று கேட்கிறீர்களா? ஆம் உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்காக அவர்களுக்குப் பிடித்த பாடல்களுடன் அவர்களுக்குப் பிடித்த நல்ல புகைப்படங்களை வைத்து ஒரு ப்ளே லிஸ்டை கிரியேட் செய்யவும். இவற்றை அவர்கள் பார்க்கும் போது மன மகிழ்ச்சி ஏற்படும்.இதுப்போன்றவற்றை உங்களால் செய்ய முடியவில்லையென்றால், கிரிடிங் கார்டுகள் வழங்கவும்.
பண்டிகை காலங்களில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கூடி ஒரே இடத்தில் பண்டிகையை கொண்டாடுவது உண்டு. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பரிசுக்கு கார்ட் கேம்ஸ் வாங்கி கொடுக்கலாம். யூனோ கார்ட்ஸ், பிசினஸ் போர்ட் கேம் போன்றவை அனைவரும் உட்கார்ந்து விளையாட பொருத்தமானது. அதே போல உங்கள் பட்ஜெட் 500 ரூபாயை விட மலிவாக தான் இந்த கார்ட் கேம்ஸ் அமைந்துள்ளது.
மேலும் படிக்க: உங்கள் வீட்டில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தை வண்ணமயமாக மாற்றும் 6 குறிப்புகள்
மேற்கூறியவற்றைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக மாற்ற வேண்டும் என்றால், உங்களது நண்பர்களுக்கு பூங்கொத்துக்கள், புகைப்படத்துடன் கூடிய பரிசுப்பொருட்கள், சாக்லேட்டுகள், வீட்டிலேயே சுலபமாக செய்யப்படும் கேக்குகளை விதவிதமாக செய்துக் கொடுககலாம்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com