விறுவிறுப்பான கதைக்களம் - திரையரங்களில் "பார்க்கிங்" கூட்டம்

Lets get married திரைப்படத்தின் தோல்வியால் துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு பார்க்கிங் மூலம் ஹரிஷ் கல்யாண் கம்பேக் கொடுத்திருக்கிறார்

Main id

நகரத்துவாசிகள் தங்களை சுற்றி அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளில் பார்க்கிங்கும் ஒன்று. இதை அடிப்படையாகக் கொண்டு இரண்டு மணி நேர படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இது சாதாரண பிரச்சினையாகத் தோன்றினாலும் ஹரிஷ் கல்யாணுக்கும், எம்.எஸ்.பாஸ்கருக்கும் மானப் பிரச்சினையாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் இருவருக்கும் ஏற்படும் இழப்புகளே பார்க்கிங் படத்தின் ஒன் லைன்.

ஐடியில் பணிபுரியும் ஊழியரான ஹரிஷ் கல்யாண் இந்துஜாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னையிலேயே செட்டில் ஆகிறார். இந்துஜா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் சற்று வசதியான புதிய வீட்டை தேடுகிறார். எம்.எஸ்.பாஸ்கர் குடியிருக்கும் வீட்டின் மேல் போர்ஷனுக்கு இருவரும் குடியேறுகின்றனர். நேர்மையான அரசு அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் சிடுமூஞ்சியாக இருக்கிறார். ஆரம்பத்தில் இருகுடும்பமும் நன்றாக பழகுகிறது.

 kc

அதன் பிறகு கதை சூடிபிடிக்கிறது. ஹரிஷ் கல்யாண் வாங்கும் காரால் எம்.எஸ்.பாஸ்கருக்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் பார்க்கிங் பிரச்சினை ஏற்படுகிறது. தொடக்கத்தில் அதை சகித்து கொள்ளும் எம்.எஸ்.பாஸ்கர் போகப் போக எரிச்சலடைகிறார். பிரச்சினை பெரிதாகும்போது வீட்டின் உரிமையாளர் கதாபாத்திரத்தில் வரும் இளவரசு கார் வைத்திருப்பவருக்கே பார்க்கிங்கில் முன்னுரிமை எனக் கூறிவிடுவதால் எம்.எஸ்.பாஸ்கர் மிகுந்த கோபமடைகிறார். மகளின் திருமணத்திற்காக மிகச் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி வரும் எம்.எஸ்.பாஸ்கர் இந்தப் பிரச்சினையில் சாமர்த்தியமாகச் செயல்பட நினைத்துப் புதிய கார் வாங்குகிறார்.

மேலும் படிங்கNayan 75 : உணவுக்கான உரிமை - அரைகுறையாக வெந்த அன்னபூரணி

இதையடுத்து எம்.எஸ்.பாஸ்கருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் பிரச்சினை வெடிக்கிறது. ஹரிஷ் கல்யாணின் வேகத்துடன் போட்டி போட முடியாமல் தடுமாறும் எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் மூலம் சூழ்ச்சி செய்து ஹரிஷ் கல்யாணை காவலர்களிடம் மாட்டிவிடுகிறார். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல் தனது தவறை உணர்ந்து ஹரிஷ் கல்யாணை விடுவிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிரதானா நாதன்.

 kc

இருவருக்கும் மோதல் முற்றிக் கொண்டே போகிறது. வீட்டை விட்டு வெளியேற ஹரிஷ் கல்யாணும் இந்துஜாவும் முடிவு செய்கின்றனர். அப்போது எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இருவருக்கும் இடையே உள்ள பிரச்சினையை எப்படி இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் முடித்து வைக்கிறார் என்பதே கிளைமேக்ஸ்

மேலும் படிங்கபருத்திவீரன் பிரச்சினையில் மிக்சர் சாப்பிடுகிறாரா சூர்யா ? - ரசிகர்கள்

பாஸிடிவ்ஸ் : ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, பிரதானா நாதன், ராமா என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கட்சிதமாக நடித்துள்ளனர். இந்துஜா அழகான மனைவியாகவும், வன்முறையை விரும்பாத பெண்ணாகவும் ஜொலித்திருக்கிறார். படத்தின் திரைக்கதை வலுவாக உள்ளது. பாடல்கள் , பின்னணி இசை ஆகியவை படத்தின் வேகத்திற்கு தடை போடாமல் சரியான இடத்தில் அமைந்துள்ளன. வார இறுதியில் குடும்பத்துடன் பார்க்ககூடிய ஃபீல் குட் மூவியாகத் திரையரங்குகளில் படம் பார்க் செய்யப்பட்டுள்ளது.

நெகடிவ்ஸ் : தமிழ் சினிமாவின் வழக்கமான எலி-பூனை கதை

படத்திற்கான மதிப்பெண் : 3.75 / 5

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP