herzindagi
image

சிக்கன் வாங்கினால் சிக்கன் பொட்லி செஞ்சு சாப்பிடுங்க; ரொம்ப சுவையாக இருக்கும்

சிக்கனில் ஏராளமான ரெசிபி இருந்தாலும் சிக்கன் பொட்லி சாப்பிடும் போது புது விதமான ருசியை உணர்வீர்கள். சிக்கனில் புதிதாக சமைத்து ருசிக்க நினைப்பவர்கள் சிக்கன் பொட்லி செய்து சாப்பிடலாம்.
Editorial
Updated:- 2025-07-24, 15:59 IST

சிக்கன் 65, சிக்கன் மிளகு வறுவல், சிக்கன் கிரேவி சாப்பிட்டு பழகியவர்களுக்கு சிக்கனை சாப்பிடாமலும் இருக்க முடியாது. சிக்கனிலேயே புதிய ரெசிபி சாப்பிட வேண்டும் என தோன்றவும் செய்யவும். அதற்கு இந்த சிக்கன் பொட்லி செய்யலாம். பார்ப்பதற்கு சுறுக்கு பையில் சமோசா போல் இருக்கும். சுவை அட்டகாசமாக இருக்கும். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போலவும் சிக்கன் பொட்லியை சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

chicken potli

சிக்கன் பொட்லி செய்ய தேவையானவை

  • சிக்கன்
  • தயிர்
  • பச்சை மிளகாய்
  • மஞ்சள் தூள்
  • கரம் மசாலா
  • வெங்காயம்
  • எலுமிச்சை சாறு
  • பிரெஷ் க்ரீம்
  • கசூரி மேத்தி
  • மைதா மாவு
  • நெய்
  • வெண்ணெய்

சிக்கன் பொட்லி செய்முறை

  • 300 கிராம் சிக்கன் எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி சுத்தப்படுத்தி கொத்துக் கறி போல் சிறிதாக வெட்டவும்.
  • இதனுடன் கால் கப் தயிர், பொடிதாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், கொஞ்சம் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் கரம் மசாலா கலந்து 15 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • அடுத்ததாக ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒன்றை ஸ்பூன் தக்காளி பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடத்திற்கு கலந்துவிடுங்கள்.
  • ஊறவைத்த சிக்கன் போட்டு மிதமான சூட்டில் எட்டு நிமிடங்களுக்கு வேகவிடவும்.
  • இப்போது அரை எலுமிச்சை பழ சாறு, இரண்டு ஸ்பூன் வெண்ணெய், இரண்டு ஸ்பூன் பிரெஷ் க்ரீம், அரை ஸ்பூன் கசூரி மேத்தி சேர்த்து சூடுபடுத்தவும். சிக்கன் ஓரளவு வெந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்து விடவும்.
  • பவுலில் இரண்டு கப் மைதா மாவு எடுத்தில் ஒரு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சமோசா மாவு பதத்திற்கு பிசையவும்.
  • மாவு பிசைந்த பிறகு 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். சப்பாத்தி தேய்ப்பது போல் உருண்டை எடுத்து உருட்டி வளையலை விட கொஞ்சம் பெரிதாக கட் செய்து எடுக்கவும்.
  • இதில் சிக்கனை ஸ்டஃப்பிங் செய்து சுருக்கு பை போல் மடிக்கவும். கடாயில் கடலெண்ணெய் போட்டு மிதமான சூட்டில் குறைந்தது எட்டு நிமிடங்களுக்கு வறுக்கவும்.
  • சூப்பரான சிக்கன் பொட்லி ரெடி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் இதை செய்திருந்தார்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com