பருத்திவீரன் பிரச்சினையில் மிக்சர் சாப்பிடுகிறாரா சூர்யா ? - ரசிகர்கள்

பருத்திவீரன் பிரச்சினையில் நடிகர் சூர்யா இதுவரை மெளனம் காப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனிடையே அவரது பழைய ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது. 

 
Main amir

பருத்திவீரன் படத்தின் பட்ஜெட் பிரச்சினையில் இயக்குநர் அமீரை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திருடன் என்றும் படம் எடுக்கத் தெரியாதவர் என்றும் கூறினார். இதற்கு அப்படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த கார்த்தி, பிரியாமணியை தவிர அனைவரும் இயக்குநர் ஞானவேல் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

படைப்பாளி மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்ததற்காக ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இப்பிரச்சினையில் நடிகர் சிவக்குமார் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பேச்சு அமீரை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை ஸ்டூடியோ கிரீனின் எக்ஸ் கணக்கிலிருந்து வெளியிட்டார்.

 amir

இத்துடன் பிரச்சினை முடிவுக்கு வரும் என கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில் எப்படி பொதுவெளியில் அமீரை ஞானவேல் ராஜா தரம் தாழ்த்தி பேசினாரோ அதே பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர்கள் சமுத்திரக்கனி, சசிகுமார் வலியுறுத்தி உள்ளனர். இதனிடையே படத்தில் நடித்த பலரும் யூடியூப் சேனல்களுக்கு வரிசையாகப் பேட்டி கொடுத்துவிட்டனர்.

மேலும் படிங்க“அமீர் அண்ணா என்னை மன்னிச்சிடுங்க” - வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா

இந்த விவகாரத்தில் அமீருக்கு துணை நின்ற பருத்திவீரன் படத்தின் பாடலாசிரியர் ஸ்நேகன் அப்படத்தில் அனைத்து பாடல்களைத் தானே எழுதியிருந்தாலும் ஒரு ரூபாய் கூடச் சம்பளமாக வாங்கவில்லையெனத் தெரிவித்தார். பிரியாமணியின் தந்தையாக நடித்திருந்த பொன்வண்ணன் அப்படத்தை எடுப்பதற்கு அமீர் பட்ட சிரமங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

நடிகர் சசிகுமார் தனது எக்ஸ் கணக்கில் போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது, திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி தனது எக்ஸ் தளத்தில் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது பொதுவெளியில் உக்காந்து அமீர் மீது எப்படி சேற்றை வாரி இறைச்சீங்களோ அதே பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கணும் எனப் பதிவிட்டுள்ளார்.

 amir

இத்தனை விஷயங்கள் நிகழ்ந்து விட்ட பின்னரும் பருத்திவீரன் பிரச்சினையில் நடிகர் சூர்யாவின் குடும்பம் ஏன் அமைதியாக இருக்கிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 25 படங்களுக்கும் மேல் நடித்து கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்து விட்ட கார்த்தியால் அமீரிடம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து பிரச்சினையை முடிக்க மனம் வரவில்லையா என்றும் மெளனம் பேசியதே படத்தில் கிடைத்த நட்பின் மூலம் அமீரிடம் பேசிக் கார்த்திக்கு பருத்திவீரன் வாய்ப்பைப் பெற்று தந்த அவரது அண்ணன் சூர்யா ஏன் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை என்றும் யோசிக்கின்றனர்.

மேலும் படிங்ககாந்தாரா டீஸரில் இதை கவனித்தீர்களா ? துளு மொழியில் படத்தை வெளியிட வலியுறுத்தல்

இதையடுத்து நடிகர் சூர்யா 2017ல் பதிவிட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. சமூகப் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்த சூர்யா தற்போது மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டதால் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லையோ என அந்த ட்வீட்டின் கீழ் பதிலளித்து வருகின்றனர்.

ஜெய் பீம் படத்தில் சட்டத்தை முறையாகக் கடைபிடிக்கும் வழக்கறிஞராக நடித்த சூர்யா இந்தப் பிரச்சினையில் நீதிபதியாகச் செயல்பட்டு நியாயம் யாரிடம் உள்ளதோ அவருக்குச் சாதகமான தீர்ப்பை வழங்க வேண்டும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP