வாரத்தில் பணியை தொடங்கும் முதல் நாளான திங்கட்கிழமையன்று நாம் எல்லோரும் பரபரப்பாக காணப்படுவோம். திங்கள் என்ற வார்த்தையிலேயே இந்நாள் யாருக்கானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சந்திரனுக்கு உகந்த நாள் என்பதால் திங்கட்கிழமை என்ற பெயர் வந்தது. திங்கட்கிழமை நாளில் சிவபெருமானுக்காக பலரும் சோமவார விரதம் கடைபிடிப்பது உண்டு. சிவபெருமான் சந்திரனின் துயரை நீக்கியவர். அதாவது சந்திரனுக்கு தீட்சன் நீ கலைகள் சிறிது சிறிதாக இழந்து ஒளி மிகுந்த அழகு தேய்ந்து அழகில்லாமல் போகட்டும் என சாபம் கொடுக்கிறார். சந்திரன் எங்கு சென்றாலும் துயர் நீங்கவில்லை. பிரம்மனிடம் சந்திரனின் மனைவிகள் வேண்டியும் பயனில்லை. இறுதியாக சிவபெருமானின் திருவடியில் சந்திரன் விழுகிறார்.
அப்போது சிவபெருமான் சந்திரனிடம் உன் மாமனார் கொடுத்த சாபம் நீங்கி பூரண சந்திரனாக பொலிவு பெறுவாய் என்று ஆசி வழங்குகிறார். இதையடுத்து சந்திரனின் சாபம் நீங்குகிறது. அதன்படியே அமாவாசை, பெளர்ணமி மாறி மாறி வருகிறது. சந்திரனை தன்னுடைய தலையில் சூடி கொண்டதன் காரணமாக சிவனுக்கு சந்திர மெளலீஷ்வரர் என்ற பெயரும் உண்டு. எனவே சந்திரனுக்கு வாழ்வு தந்த சிவபெருமானை சந்திரனுக்கு உகந்த நாளில் வழிபடுவது மிக நல்லது.
சந்திரன் மனதில் தெளிவை உண்டாக்க கூடியவராக கருதப்படுகிறார். ஒரு மனிதனின் மனநிலையை கணக்கிடுவதற்கு உரிய கிரகம் சந்திரன் ஆகும். ஜோதிடத்தில் ஒரு மனிதனின் மன அமைதியை சந்திரனை வைத்து கணக்கிடுவார்கள். ஆகவே மன கஷ்டம் நீங்க சோமவார விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com