herzindagi
image

"குட் பேட் அக்லி" அப்டேட் என்னாச்சு ? அஜித்தின் செயலால் விரக்தியில் ரசிகர்கள்

ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் எதுவும் வராததால் தல ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். 45க்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படத்தில் திரிஷா நடிப்பதாக ஒரு வீடியோவை மட்டுமே படக்குழு வெளியிட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-02-25, 19:15 IST

அஜித்திற்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். மன்றத்தை கலைத்து தல என கூப்பிடாதீர்கள் என்று அறிவுறுத்திய பிறகு அப்டேட் எதிர்பார்த்து காத்திருக்கும் உண்மையான ரசிகர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுவரில் போஸ்டர் ஒட்டி படத்தை விளம்பரப்படுத்திய காலம் மாறி வானத்தில் இருந்து போஸ்டருடன் குதித்து படத்தை விளம்பரப்படுத்தும் அளவிற்கு திரையுலகம் முன்னேறிவிட்டது. இதில் நடிகர் அஜித்திற்கு விலக்கு அளித்துவிடலாம். இசை வெளியீட்டு விழா கிடையாது, அப்டேட் கிடையாது, இறுதி நேரம் வரை படம் வெளியாகுமா ? வெளியாகாதா என்ற மனப்பான்மையில் ரசிகர்களை வைத்திருப்பது அஜித் படங்களுக்கு மட்டுமே சாத்தியம். பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் இருந்து தூக்கி எறியப்பட்டு ஓடிடி ரிலீசிற்கு தயாராகிவிட்டது. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் விடாமுயற்சியை ஓரங்கட்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

குட் பேட் அக்லி அப்டேட் ?

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் என அறிவிக்கப்பட்டது. படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசைமையத்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் 2 மாதங்களுக்கு முன்னே நிறைவடைந்த நிலையில் இதுவரை திரிஷாவின் ரம்யா கதாபாத்திர அறிமுகம் மட்டுமே வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதமும் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. டீசர் 28ஆம் தேதி டீசர் வெளியாகலாம் என கூறப்பட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

குட்  பேட் அக்லி அப்டேட் மறுத்தாரா அஜித் ?

எண்களை கூட்டினால் 10 வர வேண்டும் என்ற கணக்குடன் நேரம் 4.06, 5.05, 7.30, 8.02 என தொடர்ச்சியாக நல்ல நேரம் பார்த்தபடி விடாமுயற்சிக்கு ஒரு சில அப்டேட்கள் வந்தன. எனினும் விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் 22ஆம் தேதி சனிக்கிழமை இரவு மணிக்கு குட் பேட் அக்லி அப்டேட் 7.03 வெளியாகும் என கூட்டினால் 10 வருகிறது என்ற கணக்கில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 8.02 மணிக்கு அப்டேட் வந்தது. 

திரிஷாவின் கதாபாத்திர அறிமுகத்தோடு அப்டேட் நின்றுவிட்டது. வேறு எந்த கதாபாத்திரத்தின் அப்டேட்டும் வரவில்லை. அஜித் ரசிகர்களோ இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், திரிஷாவின் சமூக வலைதள கணக்குகளில் வாடகை எடுத்து குடியிருப்பது போல அப்டேட் கேட்டு ஓய்ந்துவிட்டனர். புஷ்பா 2 படத்திற்கு உலகமே வியந்து பார்க்கும் வகையில் விளம்பரம் செய்த படக்குழு குட் பேட் அக்லிக்கு அமைதி காக்கிறது. ஸ்ரீலீலாவின் ராபின்ஹுட், இந்தியில் ஜாட் படங்களுக்கு ஆர்வமிடன் விளம்பரம் செய்கின்றனர். வழக்கம் போல தனது படத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டாம் என அஜித் கூறிவிட்டதாக தெரிகிறது. 

மேலும் படிங்க  டிராகன் விமர்சனம் : பிரதீப் ரங்கநாதனின் மற்றொரு பிளாக்பஸ்டர்; அனுபாமா கலக்கல்

சுரேஷ் சந்திராவுடன் ரசிகர்கள் மோதல்

தமிழ் சினிமா நவீன உலகத்திற்கு ஏற்ப பயணிக்க அஜித் இன்னும் 90களில் இருப்பது போல தோன்றுவதாக அவரின் தனிப்பட்ட மேலாளரான சுரேஷ் சந்திராவை ரசிகர்கள் வசைபாட தொடங்கினர். அவரும் ஒவ்வொரு ரசிகராக பிளாக் செய்து வருகிறார். அஜித்தின் துபாய் ரேஸிங் வீடியோக்கள் மட்டுமே அடிக்கடி வருகின்றன. விரக்தியின் உச்சத்தில் உள்ள அஜித் ரசிகர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடையில் ருசிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்க போவதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com