2001ஆண்டு பிரசாந்த் - ஷாலினி நடிப்பில் பிரியாத வரம் வேண்டும் படம் வெளிவந்தது. 1999ல் வெளிவந்த மலையாள படமான நிறம் படத்தின் தமிழ் ரீமேக் பிரியாத வரம் வேண்டும். மலையாளத்தில் இயக்கிய கமலே தமிழிலும் இப்படத்தை இயக்கினார். படத்தில் பிரசாந்த், ஷாலினி, மணிவண்ணன், ஜனகராஜ், நிழல்கள் ரவி, அம்பிகா, கோவை சரளா நடித்திருந்தனர். படத்தில் இடம்பெறும் அழகு பொண்ணு பாடலில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் எப்படி தோன்றினார் என்ற கேள்விக்கு இயக்குநர் கமல் திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.
ஷாலினியை தடுத்தாரா அஜித் ?
அழகு பொண்ணு பாடலின் ஷூட்டிங்கில் ஷாலினி இருந்தாரா ? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கமல் அந்த நேரத்தில் ஷாலினியின் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அஜித் என்னை போனில் அழைத்து ஷாலினி திருமணத்திற்கு பிறகு நடிக்கமாட்டார் என திட்டவட்டமாக கூறினார். திருமணத்திற்கு முன்பே ஷூட்டிங்கை முடிக்க அஜித் அறிவுறுத்தினார். திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிக்க வாய்ப்பிருக்குமா என அஜித்திடம் கேட்டேன். அதற்கு Iam Very Sorry என்று சொல்லிவிட்டார்.
அஜித் Vs பிரசாந்த் தொழில் போட்டி
அந்த படத்தின் ஹீரோ பிரசாந்திற்கும், அஜித்திற்கும் தொழில் ரீதியான போட்டி இருந்ததாக கருதுகிறேன். பிரசாந்த் வேண்டுமென்றே கால்ஷீட் கொடுக்க தவறியதால் ஷூட்டிங் செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. ஷாலினியை எப்படியாவது திருமணத்திற்கு பிறகு நடிக்க வைக்க வேண்டும் என்பதில் பிரசாந்த் உறுதியாக இருந்தார் எனத் தோன்றியது. ஷாலினி கால்ஷீட் கொடுத்த நாட்களில் எல்லாம் பிரசாந்த் ஷூட்டிங்கிற்கு வராமல் கால்ஷீட்டை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது ஷாலினியும், அவரது தந்தையும் என்னை தொடர்புகொண்டு அவர் தொடர்புடைய காட்சிகளை முடித்து விடுமாறு கூறினர். வேறு வழியின்றி பிரசாந்த் டூப் வைத்து ஷாலினியின் காட்சிகளை எடுத்து முடித்தேன். அழகு பொண்ணு பாடலின் சில காட்சிகளை எடுக்க முடியாமல் போனது. ஷாலினி திருமணம் செய்தவுடன் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகிவிட்டார். அதன் பிறகே பிரசாந்த் கால்ஷீட் கிடைத்தது. ஷாலினிக்கு டூப் தேடி பிரசாந்துடன் நடிக்க வைத்தோம். பாடலில் மலையாள படத்தின் காட்சிகளை பயன்படுத்தினேன். அதில் தான் ஷாலினி குஞ்சாக்கோ போனுடன் நடனமாடியிருந்தார். ஏனெனில் 1999ல் வெளியான நிறம் படத்தில் ஷாலினியே ஹீரோயின். திரையரங்குகளில் ரசிகர்கள் அதை கவனிக்க தவறினர். தற்போது யூடியூபில் பாடல் இருப்பதால் கண்டுபிடித்துவிட்டனர் என இயக்குநர் கமல் கூறினார்.
ஷாலினியை திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு அஜித் தடுத்தாரோ இல்லையோ, பிரசாந்த் - அஜித் இடையே தொழில் போட்டி காரணமாக இப்பிரச்னை ஏற்பட்டதோ இல்லையோ என்ற உண்மை அவரவருக்கே வெளிச்சம். எனினும் 1999ல் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை 2001ல் எடுக்கப்பட்ட படத்தில் பயன்படுத்தி ரசிகர்களை ஏமாற்றியது சரியா ?
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation