புன்னகையைப் பிரதபலிக்கும் உதடுகள் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த லிப்ஸ்டிக், லிப் பாம் போன்றவற்றை வாங்கி பெண்கள் பலர் பயன்படுத்துவார்கள். இதைத் தவிர்த்து இயற்கையான முறையில் எப்படி இவற்றை சரி செய்ய முடியும்? என்பது குறித்த விபரங்களை இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.
ஆண்கள் மற்றும் பெண்களின் சருமத்தின் நிறத்திற்கு மெலனின் எனப்படும் நிறமி காரணமாக அமைகிறது. இதை குறிப்பிட்ட அளவு தான் உடலில் சுரக்க வேண்டும். அதிகமாக மெலனின் உற்பத்தியாகும் போது சருமத்தின் நிறம் மாற்றம் பெறுகிறது. குறிப்பாக கருந்திட்டுகள் முதல் உதடுகள் கருப்பாவது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நம்முடைய தோல் வழக்கத்தை விட அதிக மெலனின் உற்பத்தி செய்யத் தொடங்கும் போது சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கு வழிவகுக்கிறது.
இதோடு மட்டுமின்றி சருமத்தில் அதிக சூரிய ஒளி தாக்கம், புகைப்பிடித்தல், போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் போன்ற பல காரணங்களால் உதடுகள் கருமை நிறத்தை அடைகிறது.
மேலும் படிக்க: தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க
உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாக்குவதற்கு சந்தைகளில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் தேவையில்லை. வீட்டில் தயாரிக்கப்படும் சில ஸ்க்ரப்கள் போதும்.
ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் சிறிதளவு சர்க்கரை கலந்து வீட்டில் தேன் ஸ்க்ரப் செய்யலாம். இதை உதடுகளில் லேசாக தடவி மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு துடைத்துவிடவும்.
தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறையாவது மேற்கொள்ளும் போது கருமையான நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
மேலும் படிக்க: முக பொலிவிற்கு எப்படியெல்லாம் பால் உதவியாக உள்ளது தெரியுமா?
உதடுகளில் பாதாம் எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வறண்ட உதடுகளை ஈரப்பதமாக்குகிறது. இதோடு உதடுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பாதாம் எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. தேங்காய் எண்ணெய் கொண்டும் உதடுகளை நீங்கள் மசாஜ் செய்துக் கொள்ளலாம். நிச்சயம் உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்க வைத்து உதடுகளில் உள்ள கருப்பை நீக்க உதவுகிறது.
உடலின் நீர்ச்சத்துக்கள் குறையும் போது உடல் சோர்வை அடைகிறோம். ஊட்டச்சத்துக்கள் குறைபாடு ஏற்படுவதோடு கருந்திட்டுகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே முடிந்தவரை ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
இதுபோன்ற முறைகளைப் பின்பற்றினாலும் உதடுகளில் உள்ள கருமையான நிறத்தைப் போக்க முடியவில்லையா? ஒருமுறையாவது தோல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என அறிந்துக் கொள்வது நல்லது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com