ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. படத்தில் திரிஷா, ஜெயிலர் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் திரிஷாவின் ரம்யா கதாபாத்திர வீடியோ வெளியான நிலையில் தற்போது படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 1.30 நிமிட டீஸரில் அஜித்திற்கே உரிய மாஸ், அதிரடி காட்சிகள் நிறைந்துள்ளன. டீஸரில் அஜித்தின் கதாபாத்திரம் ஏகே என்று அழைக்கப்படுகிறது.
அப்டேட் அப்டேட் என கேட்டு காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு டீஸரை வெளியிட்டு குஷிப்படுத்தியுள்ளது குட் பேட் அக்லி படக்குழு. ஏகே ஒரு ரெட் டிராகன், நான் யார் என்று காட்டுகிறேன், நல்லவனாக இருந்தாலும் உலகம் கெட்டவனாக மாற்றி விடுகிறது, அது போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 1.30 நிமிட டீஸரில் அஜித் பல லுக்கில் தோன்றுகிறார். வாலி, தீனா, அமர்க்களம், பில்லா படங்களின் கதாபாத்திரங்களை குட் பேட் அக்லி டீஸரிலும் பார்க்க முடிகிறது.
டீஸரில் அஜித் காவல்துறை உடையும் அணிந்திருக்கிறார். குட் பேட் அக்லி போஸ்டர் வெளியான போதே இது கொரியன் படமான தி காப், தி கேங்ஸ்டர், தி டெவில் படத்தின் ரீமேக்காக இருக்க கூடும் என பேசப்பட்டது. டீஸரை பார்க்கும் போது இது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான சிம்புவின் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் மற்றும் பிரபுதேவாவின் பகீரா படங்கள் தோல்வியை தழுவின. திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி வசூலை ஈட்டின. இந்த நிலையில் பெரிய ஹீரோவான அஜித்தை வைத்து மாஸான படத்தை எடுத்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.
மேலும் படிங்க Suriya 46 : தெலுங்குவிற்கு பறந்த நடிகர் சூர்யா; வெங்கி அட்லூரியுடன் கைகோர்ப்பு
குட் பேட் அக்லி டீஸர் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது என்றே சொல்லலாம். விடாமுயற்சியால் துவண்டு போய் கிடந்த அஜித் ரசிகர்களுக்கு புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. குறிப்பாக டீஸருக்கு மினி டீஸர் அப்டேட், போஸ்டர் என விளம்பர பணிகளை தயாரிப்பு நிறுவனம் சிறப்பாக செய்துள்ளது. வரும் வாரங்களில் இரண்டு பாடல்களும் வெளியாக உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com