கங்குவா படத்தில் பெரும் பின்னடைவை சந்தித்த நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றிய ரெட்ரோ படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மன் படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவுக்கு 45வது படமாகும். படத்தில் சூர்யாவின் ஜோடி திரிஷா. மும்பைக்கு குடி பெயர்ந்துவிட்ட நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு திரையுலகில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே ரத்த சரித்திரம் படத்தில் நடித்திருந்தாலும் நேரடி தெலுங்கு படத்தில் சூர்யா நடிப்பது இதுவே முதல்முறை.
தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி சூர்யாவை வைத்து நேரடி தெலுங்கு படம் எடுக்கிறார். இதை இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷும் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெங்கி அட்லூரி கதை எழுதவதற்கு 8 மாத விடுப்பு எடுக்க விரும்புவதாகவும் சுயசரிதை, காவல் அதிகாரி படம், ரொமான்டிக் காதல் படம், மற்றொரு படமென நான்கு கதைகள் தன்னிடம் உள்ளதாக கூறியிருந்தார்.
சூரரைப் போற்று போன்ற சுயசரிதை படம், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என காவல் அதிகாரி கதாபாத்திர படங்களில் சூர்யா நடித்துவிட்டதால் வெங்கி அட்லூரியுடன் புதிய ஒரு கதையிலேயே இணைய வாய்ப்புள்ளது. மாஸ் ஹீரோ ஆக உருவெடுக்க முயற்சிக்கும் சூர்யா ரொமான்டிக் காதல் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. இந்த படத்தில் நடிக்க தெலுங்கு நட்சத்திரம் பாக்ய ஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே மாதத்தில் படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.
மேலும் படிங்க "குட் பேட் அக்லி" அப்டேட் என்னாச்சு ? அஜித்தின் செயலால் விரக்தியில் ரசிகர்கள்
7ஆம் அறிவு படத்தில் இருந்து சூர்யாவுக்கு தெலுங்குவிலும் ஓரளவு ரசிகர்கள் உண்டு. சிங்கம் சீரிஸ், 24, காப்பான் படங்கள் தெலுங்குவில் வசூலை குவித்தன. பாகுபலி பட ப்ரோமோஷனிலும் சூர்யா பங்கேற்று இருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
View this post on Instagram
சூர்யா அடுத்தடுத்த படங்களை ஒப்பந்தம் செய்வது வருவதால் வெற்றி மாறனுடன் வாடிவாசல் தொடங்கிட இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகலாம். 2026க்கு பிறகே வாடிவாசலின் நிலை ரசிகர்களுக்கு தெரிய வரும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com