துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சாய் குமார், ரித்விக் ஆகியோர் நடித்த லக்கி பாக்ஸர் திரைப்படம் தீபாவளி பண்டிகைகையொட்டி அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. படத்திற்கு வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்டோபர் 30ஆம் தேதி ப்ரீமியர் ஷோவும் போடப்பட்டது. முழு தெலுங்கு படமான லக்கி பாஸ்கர் தமிழ், மலையாளம், இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. துல்கர் சல்மான் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்துள்ளார். தனுஷின் வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். கிங் ஆஃப் கோத்தாவின் தோல்வியில் துவண்டு கிடந்த துல்கருக்கு இந்த படம் வெற்றியா ? விமர்சனத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
லக்கி பாஸ்கர் கதை : திறமையான வங்கி ஊழியருக்கு பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. மிடில் கிளாஸ் வாழ்க்கையில் தவிக்கும் அந்த வங்கி ஊழியர் குடும்ப சூழ்நிலை காரணமாக வங்கி பணத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் சிபிஐ அவரை தேடி வருகிறது. அவர் சிக்கினாரா ? தப்பினாரா என்பதே கதை.
லக்கி பாஸ்கர் முதல் பாதி
மிடில் கிளாஸை சேர்ந்த திறமையான வங்கி ஊழியர் துல்கர் சல்மான் பதவி உயர்வை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். குடும்பத்தின் பொருளாதார சூழல் அவரை விரட்டிக் கொண்டிருக்க எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றொருவரின் கைகளுக்கு செல்கிறது. குடும்ப சூழ்நிலையை கருதி ராம்கியுடன் கைகோர்த்து வங்கி பணத்தை தவறாக பயன்படுத்துகிறார். இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது. மகன் ரித்விக்கின் ஆசை, தம்பியின் படிப்பு, குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்கிறார். ராம்கியும் தேவையான அளவு சம்பாரித்துவிட்டு வெளிநாடு சென்று விடுகிறார். எந்தவொரு தொய்வும் இன்றி முதல் பாதி வேக வேகமாக செல்கிறது.
லக்கி பாஸ்கர் இரண்டாம் பாதி
தவறுகளை நிறுத்திக்கொள்ளும் சமயத்தில் உதவி மேலாளர் பொறுப்பு கிடைக்கிறது. அப்போது வங்கி பணத்தை வைத்து நடக்கும் பங்குச் சந்தை மோசடியை கண்டுபிடித்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார். பணம் ஒரு மனிதனை பத்தும் செய்ய வைக்கும் என்பதை ஜெட் வேகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் வெங்கி அட்லூரி. பணம் வந்த பிறகு குடும்பத்தில் தனது பங்களிப்பு இல்லை என்பதை உணர்ந்த துல்கர் தான் செய்த மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருகிறார். அந்நேரத்தில் சிபிஐ துல்கரை கைது செய்து விசாரிக்கிறது. தப்பினாரா ? இல்லையா என்பது கிளைமேக்ஸ்.
படத்தின் நெகட்டிவ்ஸ்
மும்பை பின்னணியில் உள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் முழுக்க முழுக்க செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது. வீடு முதல் வங்கி வரை அனைத்துமே செட். இதில் தயாரிப்பு குழு அதிக கவனம் செலுத்தி இருக்கலாம்.பாடல்கள் ஏதும் மனதில் ஒட்டவில்லை.
மேலும் படிங்ககொட்டுக்காளி விமர்சனம் : சூரி, அன்னா பென் நடிப்பு வேற ரகம்! பொறுமையை சோதித்த விநோத்ராஜ்...
ரேட்டிங் - 3.75 / 5
வங்கி, பங்குச் சந்தையில் எவ்வாறு மோசடி நடக்கிறது என்ற செய்திகளை நாம் படித்திருப்போம். அதை அனைத்து தரப்பினருக்கும் புரியம்படி சொன்ன வெங்கி அட்லூரிக்கி பாராட்டுகள்.
துல்கர் சல்மான் இன்னும் சில படங்கள் தெலுங்குவில் நடித்தால் அங்கு பிரபாஸ், ராம் சரணுக்கே டஃப் கொடுக்க வாய்ப்புண்டு. ஏற்கெனவே சீதா ராமம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation