லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பாடல் சிகிடு சிகிடு வெளியாகி இருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் மோனிகா வெளியாகியுள்ளது. பாடலில் பூஜா ஹெக்டே கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். குறிப்பாக மலையாள செளபின் சாஹிரின் ஆட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விஷ்ணு எடவன் பாடலுக்கு வரிகள் எழுத அனிருத், சுப்லாஷினி பாடியுள்ளனர். அசல் கோலார் ராப் பகுதியை பாடியுள்ளார்.
மோனிகா பெலூச்சி இறங்கி வந்தாச்சி என தொடங்கும் பாடல் 3 நிமிடம் 34 விநாடிகள் நீடிக்கிறது. பூஜா ஹெக்டே, செளபின் சாஹிர், ரிஷிகாந்த் பாடலில் நடனமாடியுள்ளனர். துறைமுக பின்னணியில் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களில் கவர்ச்சி பாடல் இடம்பெற்றதில்லை. முதல் முறையாக லோகேஷ் இயக்கத்தில் கவர்ச்சி பாடல் இடம்பெற்றிருக்கிறது. பேன் இந்தியா மாஸ் கமர்ஷியல் படமாக கூலி உருவாகியிருப்பதால் ரசிகர்களுக்காக பூஜா ஹெக்டேவை கவர்ச்சி நடனமாட வைத்துள்ளனர்.
இப்பாடலில் ரஜினிகாந்த் நடனமாடவில்லை. எனினும் பாட்ஷா, சந்திரமுகி படத்தின் லக லக லக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காவாலா பாடலில் தமன்னாவின் ஹூக் ஸ்டெப் பிரபலமாகி இன்ஸ்டாவில் வைரலானது போல் மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவின் லவ் யூ பேபி மா, இறுதியில் செளபின் ஹாகிர் நடனம் நிச்சயம் வைரலாக போகிறது.
ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு 30 நாட்கள் மட்டுமே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளது. சென்னையில் கூலி படக்குழு இசைவெளியீட்டு விழா நடத்தி ட்ரெய்லர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கவுள்ளார். அமீர் கான், நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் சாஹிர், சத்யராஜ், சுருதி ஹாசன் என பேன் இந்தியா நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் கூலி ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com