herzindagi
image

குடும்பஸ்தன் விமர்சனம் : மிடில் கிளாஸ் ஆண்களின் வாழ்க்கையை பிரதிபலித்த மணிகண்டன்

இராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து தரப்பினரும் திரையரங்கில் ரசிக்கும் வகையில் குடும்பஸ்தன் படம் வெளிவந்துள்ளது.
Editorial
Updated:- 2025-01-30, 09:40 IST

இராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன், பிரசன்னா பாலசந்திரன், ஜென்ஸன் திவாகர் நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். ஜனவரி 24ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. குட் நைட் படத்தில் அன்பான கணவன், லவ்வர் படத்தில் முரட்டுத்தனமான காதலன் கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் இந்த படத்தில் பொறுப்பான மிடில் கிளாஸ் ஆணாக நடித்திருக்கிறார். வைசக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குடும்பஸ்தன் கதைச் சுருக்கம்

கடன் தொல்லையின்றி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழும் மணிகண்டனுக்கு திடீரென வேலை பறிபோகிறது. வீட்டில் உண்மையை மறைத்து கடன் வாங்க ஆரம்பிக்கும் மணிகண்டனுக்கு தினசரி ஏதாவது ஒரு சிக்கல் வருகிறது. இவற்றில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதே குடும்பஸ்தன்.

குடும்பஸ்தன் விமர்சனம்

காதல் திருமணம் செய்து கொள்ளும் மணிகண்டனுக்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றன. மாதாந்திர சம்பளத்தை வைத்து வீட்டில் அனைவரையும் மகிழ்வித்து வாழ்கிறார். சுயமரியாதையை இழக்க கூடாது என்பதற்காக அலுவலகத்தில் சண்டையிட்டு வேலையில் இருந்து நீக்கப்படுகிறார். மாதம் 1ஆம் தேதி வர வேண்டிய ஊதியம் தடைபடுகிறது. கடன் வாங்க ஆரம்பிக்கும் மணிகண்டனுக்கு முன்பை விட இரண்டு மடங்கு பொறுப்புகள் அதிகரிக்கின்றன. குடும்பமே அவரை ஒதுக்க தொடங்குவதால் மனம் உடைந்து போகிறார்.

குடும்பஸ்தன் படத்தின் பாஸிட்டிவ்ஸ்

  • மிடில் கிளாஸ் குடும்பஸ்தனான மணிகண்டனின் நடிப்பு அபாரம். அனைத்து காட்சிகளிலும் மிடில் கிளாஸ் ஆண்களை பிரதிபலிக்கிறார். அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலும் சிரிப்பை வரவழைக்கிறது.
  • ஆந்திர இறக்குமதியான மேகனாவின் நடிப்பு அற்புதம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயருக்கு அவர் சொன்ன விரிவாக்கத்தை இனி பலரும் பயன்படுத்த போகிறார்கள்.
  • குரு சோமசுந்தரம், மணிகண்டன் கதாபாத்திரத்தின் நண்பர்கள் படத்தை கலகலப்பாக வைத்திருக்கின்றனர்.
  • ஆன்லைன் லோன், இன்ஸ்டா பயன்படுத்தி பணம் சம்பாரிப்பு போன்ற விஷயங்களை படத்தில் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
  • வைசக்கின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு தேவையான உயிர்ப்பை அளிக்கின்றன.
  • படம் தொய்வின்றி அமைந்ததற்கு திரைக்கதை எழுத்தாளரை பாராட்ட வேண்டும்.
  • ஒரு இளைஞனுக்கு வேலை இல்லையென்றால் சமூகத்தை தாண்டி குடும்பமே அவனை புறக்கணிக்கும் என்பதை காட்சிப்படுத்திய விதம் யதார்த்த உண்மை.

மேலும் படிங்க  மிஸ்டர்.ஹவுஸ்கீப்பிங் விமர்சனம் : ஹரி பாஸ்கர், லாஸ்லியாவின் காதல் காவியம் ரசிகர்களின் மனதை வென்றதா ? 

குடும்பஸ்தன் படத்தின் நெகட்டிவ்ஸ்

  • மணிகண்டன் ஒரு சில இடங்களில் கொடுத்த காசுக்கு மேல் நடிப்பது போல் இருந்தது.
  • குரு சோமசுந்தரம் கதாபாத்திரத்தின் சில காட்சிகளை நீக்கி இருந்தாலும் படத்திற்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது.

ரேட்டிங் - 3.5 / 5

குடும்பமாக திரையரங்குகளில் கட்டாயம் ரசிக்க வேண்டிய படம் இந்த குடும்பஸ்தன்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com