ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தி டோர். மலையாள படமான டோர் மார்ச் 28ஆம் தேதி வெளியானது. 5 மொழிகளில் இப்படம் வெளியாகி இருந்தாலும் எம்புரான் மீது அனைவரின் பார்வை இருந்ததால் கவனிக்கப்படாமல் போய்விட்டது. இது மலையாள படம் என்றாலும் ஒட்டுமொத்த காட்சிகளும் தமிழகத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது. ஜெயபிரகாஷ், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீரஞ்சனி, கபில் வேலவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாருங்கள் டோர் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
டோர் கதைச்சுருக்கம்
கட்டடக் கலைஞரான பாவனா அடுக்குமாடி குடியிருப்பின் பணிக்காக குல தெய்வ கோயிலை இடிக்கிறார். அதன் பிறகு தொடர்ச்சியாக உயிரிழப்புகள் நடக்கின்றன. இதன் பின்னணியை பாவனா கண்டறிவதே டோர் படத்தின் கதை.
டோர் விமர்சனம்
கட்டடக் கலைஞரான பாவனா தந்தையின் உயிரிழப்பையடுத்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார். மீண்டும் பணியை தொடர சென்னைக்கு வருகையில் அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பாவனாவின் வீட்டிலும் அமானுஷ்ய செயல்கள் அரங்கேறுகின்றன. ஆத்மாக்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் நபருடன் உரையாடும் போது தந்தையின் உயிரிழப்பு, அடுக்குமாடி குடியிருப்பின் மரணங்கள் குறித்து பாவனா விரிவாக விசாரிக்க முயற்சிக்கிறார். நயன்தாராவின் மாயா, சமந்தாவின் யூ டர்ன் வரிசையில் மற்றொரு முயற்சியாக பாவனாவின் டோர் படத்தைக் குறிப்பிடலாம்.
டோர் படத்தின் பாஸிட்டிவ்ஸ்
- வழக்கமான அமானுஷ்ய கதையை பழிவாங்கலுடன் தொடர்புப்படுத்தி 2.15 மணி நேரம் ஓரளவு தொய்வின்றி எடுத்துள்ளனர்.
- பாவனா, கணேஷ் வெங்கட்ராமன் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சரியாக நடித்துள்ளனர்.
டோர் படத்தின் நெகட்டிவ்ஸ்
- எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாத வலுவற்ற திரைக்கதையை எழுதியுள்ளனர்.
- பேய் அல்லது அமானுஷ்ய காட்சிகளுக்கு பார்த்து பயம் வரவில்லை. கண்ணாம் பூச்சி விளையாடும் பேய் போல் இருக்கிறது.
- ஆரம்பத்தில் பாவனா யாரிடமும் பேசாத நபர் போல் இருக்கிறார். திடீரென எல்லோர் மீது அன்பு கொண்ட நபராக மாறுகிறார். எதற்காக எல்லா காட்சிகளிலும் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார் எனத் தெரியவில்லை.
- அமானுஷ்ய சக்தியின் நோக்கம் தன்னை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். கட்டட தொழிலாளிகள் என்ன பாவம் செய்தனர். அவர்கள் ஏன் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தனர் என புரியவில்லை.
- டோர் - இந்த படத்திற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு. பேச்சி அம்மன் என்றே தலைப்பு வைத்திருக்கலாம்.
டோர் ரேட்டிங் - 2.25 / 5
கடவுள், குல தெய்வங்களை நம்பாத மக்கள் இப்படத்தை பார்த்த பிறகு உடனடியாக கோயிலுக்கு செல்ல வாய்ப்புண்டு.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation