வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் ராபின்ஹுட். தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி கொண்டாட்டத்தை முன்னிட்டு மார்ச் 28ஆம் தேதி ராபின்ஹுட் படம் திரையரங்குகளில் வெளியானது. ராஜேந்திர பிரசாத், வெண்ணெலா கிஷோர், டாம் சாக்கோ, ஆடுகளம் நரேன், கேடீகா சர்மா, சிறப்பு தோற்றத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடித்துள்ளார். வாருங்கள் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டுவதற்காக கொள்ளைகாரனாக வாழும் ஹீரோ நிதின் ஸ்ரீலீலாவின் பாதுகாப்பிற்காக கிராமத்திற்கு செல்கிறார். ஒட்டுமொத்த கிராமமும் பல ஆண்டுகளாக களேபரத்தில் இருக்கிறது. அக்கிராமத்தை ஹீரோ எப்படி சிக்கலில் இருந்து விடுவிக்கிறார் என்பதே ராபின்ஹுட்.
ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளரும் நிதின் அந்த காப்பகம் தொடர்ந்து செயல்படுவதற்காக திருட்டு வேலையில் ஈடுபடுகிறார். காவல்துறையின் கிடுக்குப்பிடியால் வேலை தேடுகிறார். அப்போது ஸ்ரீலீலாவின் அறிமுகம் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருந்து சொந்த கிராமத்திற்கு வருகை தரும் ஸ்ரீலீலாவின் பாதுகாவலராக நிதின் செயல்படுகிறார். ஒட்டுமொத்த கிராமமும் கஞ்சா வியாபாரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கிராமத்தை நிதின் எப்படி மீட்கிறார்? ஸ்ரீலீலாவின் தாத்தாவிற்கும் நிதினுக்கும் என்ன தொடர்பு என்பதை இயக்குநர் வெங்கி குடுமுலா சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்.
நீங்கள் ஸ்ரீலீலாவின் ரசிகராக இருந்தால் ஒரு முறை ராபின்ஹுட் படத்தை தாராளமாக பார்க்கலாம்.
மேலும் படிங்க வீர தீர சூரன் விமர்சனம் : கமர்ஷியல் ஹிட் கொடுத்த விக்ரம், எஸ்.ஜே.சூர்யா & துஷாரா அட்டகாசம்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com