
தமிழில் மாநகரம், கைதி, விக்ரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாலிவுட் செல்கிறார். சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூலி படத்தை முடித்த கையோடு கைதி 2 பணிகளை தொடங்கும் லோகேஷ் கனகராஜ் தனது நீண்ட நாள் கனவான இரும்பு கை மாயாவி படத்தை அமீர் கானை வைத்து இயக்குகிறார். மணிரத்னம், விஷ்ணு வர்தன், ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து மற்றொரு தமிழ் இயக்குநர் பாலிவுட் செல்கிறார். திரையுலகில் பத்து படங்களை இயக்குவதே தனது நோக்கம் என அறிவித்திருந்த லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு முடிப்பாரா ? இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

கஜினி, லகான், தங்கல் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பாலிவுட் நடிகர் அமீர் கான் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார். நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடிப்பதை உறுதி செய்தததோடு லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறினார். லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கியுள்ள கூலி படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இப்படம் ரிலீசாகவுள்ளது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கைதி 2 பணிகளை தொடங்கியுள்ளார்.
மேலும் படிங்க அகண்டா 2, ஆர்யாவின் அனந்தன் காடு இந்த வார சினி அப்டேட்ஸ்
தனது முதல் மூன்று படங்களுக்கு பிறகே லோகேஷ் கனகராஜ் இரும்பு கை மாயாவி என்ற சூப்பர் ஹீரோ கதையில் படம் எடுப்பது நீண்ட நாள் கனவு என கூறியிருந்தார். இப்படத்தில் சூர்யா நடிப்பதாகவும் இருந்தது. ஆனால் மிகப்பெரிய பொருட்செலவு தேவைப்படுவதால் படத்தின் பணிகள் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. திரையுலகில் 6-7 படங்களை முடித்த பிறகு இரும்பு கை மாயாவி படத்தை தொடர்வேன் என லோகேஷ் கூறியிருந்தார். இந்த நிலையில் சூப்பர்ஸ்டாரின் கூலி படத்தில் அமீர் கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சூட்டிங்கும் நடைபெற்றது. கூலி படத்திற்காக அமீர் கானை சந்தித்த போது இரும்பு கை மாயாவி கதையை லோகேஷ் கனகராஜ் அவரிடம் கூறியுள்ளார். கதை பிடித்துப் போகவே அமீர் கானும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் படிங்க மெட்ராஸ் மேட்னி விமர்சனம் : காளி வெங்கட் நடித்திருக்கும் தவமாய் தவமிருந்து 2
இது குறித்து அமீர் கான் கூறுகையில் லோகேஷ் கனகராஜ் இந்தாண்டு கைதி 2 பணிகளை தொடங்கி முடிப்பதாகவும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் இரும்புக்கை மாயாவி சூட்டிங் ஆரம்பிக்கும் என கூறியுள்ளார். சூர்யா நடிக்க வேண்டிய படம் மீண்டும் வேறொரு நடிகரின் கைகளில் சென்றுள்ளது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com