image

அகண்டா 2, ஆர்யாவின் அனந்தன் காடு, சிம்பு - வெற்றிமாறன் புது கூட்டணி... இந்த வார சினி அப்டேட்ஸ்

பாலய்யா பிறந்தநாளை முன்னிட்டு அகண்டா 2, ஆர்யாவின் அனந்தன் காடு, புது கூட்டணி போடும் சிம்பு - வெற்றி மாறன், ரவி மோகனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா என இந்த வார சினிமா அப்டேட்ஸ் களைகட்டியுள்ளன.
Editorial
Updated:- 2025-06-09, 20:00 IST

தக் லைஃப் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஏதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமளிக்க திரையுலகில் இருந்து பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன. குபேரா ரிலீஸிற்கு தனுஷ் தயாராகி வருகிறார். ஹார்ட் டிக்ஸ் காணவில்லை என கிண்டல் அடிக்கப்பட்ட லால் சலாம் படம் ஓடிடி ரிலீஸில் கவனம் பெற்றுள்ளது. சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்ட பரமசிவன் பாத்திமா திரைப்படம் தடம் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. படை தலைவன் படத்தில் கேப்டன் விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.

அகண்டா 2 - தாண்டவம்

பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் அகண்டா. 100 கோடி வசூலித்து இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. அகண்டா 2 தாண்டவம் என படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். அழிக்கும் கடவுளான சிவனே என்ன கட்டளையை கேட்பார் நீ தப்பி விடுவாயா என பாலய்யா வில்லனை மிரட்டும் பஞ்ச் வசனங்களுடன் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமன் அகண்டா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிம்பு - வெற்றிமாறன் புது கூட்டணி 

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் 8 வருடங்களுக்கு முன் வந்த வடசென்னை திரைப்படம் அசுர வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். ஏனோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிம்பு விலகி தனுஷ் அப்படத்தில் நடித்தார். இந்த நிலையில் சிம்புவுடன் வெற்றிமாறன் புதிய படத்திற்காக இணைகிறார். இப்படமும் வட சென்னை ரவுடி படம் என கூறப்படுகிறது. இப்படம் முடிந்த பிறகு வாடிவாசல் தொடங்கும் என்று திரையுலகினர் நம்புகின்றனர்.

ஆர்யா ஆனந்தன் காடு 

ஆர்யாவின் அடுத்த பட டீஸர் வெளியாகியுள்ளது. முரளி கோபி எழுதியுள்ள கதையை ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். ஆர்யாவுக்கு இது 36வது படமாகும். இதை முடித்த பிறகு சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாக பணிகள் தொடங்கவுள்ளது.  

BRO CODE ரவி மோகன்

வடக்குபட்டி ராமசாமி டிக்கிலோனா படங்களை இயக்கிய கார்திக் யோகி அடுத்ததாக ரவி மோகனை வைத்து BRO CODE என்ற படத்தை எடுக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படம் ரவி மோகனின் சொந்த நிறுவன தயாரிப்பாகும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com