
விஜய்யின் 68 வது படம் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் லோகேஷின் LCU படமாக இருக்குமா இல்லையா என்று ரசிகர்கள் மத்தியில் பல குழப்பம் இருக்கிறது.இது குறித்து படக்குழுவினர் எதுவும் அறிவிக்கவில்லை.இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகிறது. லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஒரு பக்கம் நடந்தும் வரும் நிலையில், தனது அடுத்த படம் குறித்து விஜய் அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இந்த திரைப்படம் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 25 வது படமாகும். எனவே இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
அனைத்து பார்வையாளர்களாலும் விரும்பப்படும் சிறந்த பொழுதுபோக்கு படமாக தளபதி68 இருக்கும். சர்வதேச தரத்தில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளார்கள் என படக்குழு அறிவித்துள்ளது.

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக பேசப்பட்டது. லியோ படத்தின் வெளியீட்டிற்கு பிறகே இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம் :'தளபதி 68’ படத்திற்கு விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா?
தளபதி 68 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே .சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
image:google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com