Tamil Movies 2023 : இந்தாண்டு வெளியான படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலை பார்ப்போம். இந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்த படங்கள் இருக்கிறதா? என்று பாருங்கள். 

tamil movies  list
tamil movies  list

விடுதலை

2023 ஆம் ஆண்டு வெளியான விடுதலை பார்ட் 1 மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, விஜய் சேதுபதி முதன்மை ரோலில் நடித்திருந்தார். வழக்காமன வெற்றிமாறன் பாணியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை பார்க்காதவர்கள் ஜீ5 ஓடிடி தளத்தில் விடுதலை முதல் பாகத்தை பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன் 2

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகியது. முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்ட அடிக்க, 2வது பாக, இந்தாண்டு வெளியாகியது. படத்தில் மணிரத்னம் செய்திருந்த சில மாற்ரங்கள் விமர்சிக்கப்பட்டாலும் மொத்தத்தில் பொன்னியின் செல்வன் 2 தமிழ் சினிமாவில் இலக்கியமாக் அமைந்துள்ளது. அமேசான் தளத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்க்கலாம்.

ps

பத்து தல

தொடர்ந்து பேக் டூ பேக் ஹிட் கொடுக்கும் சிம்புவின் பத்து பல 2023 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் படம் என்றே சொல்லலாம். சிம்புவின் நடிப்பு, திரைக்கதை ரசிகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக ஏ.ஆர் ரகுமானின் இசை படம் முழுவதும் தெறிக்க விட்டது. இதுவரை இந்த படத்தை பார்க்காதவர்கள் அமேசான் தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

யாத்திசை

மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், ரசிகர்களால் வாவ் என கொண்டாடப்பட திரைப்படம் யாத்திசை. புது நடிகர், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் யாத்திசையை கொண்டாட வைத்தன. இந்த படத்தையும் அமேசான் தளத்தில் நீங்கள் கண்டுக்களிக்கலாம்.

pathu thala simbu

குட் நைட்

மணிகண்டன் நடிப்பில் சமீபர்த்தில் வெளியான குட் நைட் திரைப்படம் இந்தாண்டு ஃபீல் குட் மூவி என பெயர் எடுத்துள்ளது. குடும்பத்துடன் ரசித்து பார்க்ககூடிய படம். இதுவரை பார்க்காதவர்கள் அமேசான் பிரைமில் தற்போது பார்க்கலாம்.

டாடா

பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. விமர்சனம் ரீதியாக பாராட்டுக்களை அள்ளியது. தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

பிற படங்கள்

2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் வாரிசு, துணிவு, வாத்தி, அயோத்தி, தீராக் காதல், பொம்மை நாயகி, 1947, விமானம் போன்ற படங்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக உள்ளது. இந்த படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் உள்ளன. இதுத்தவிர இந்த லிஸ்டில் புதியதாக இணைந்துள்ளது மாமன்னன். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைகிறது.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP