
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சமாளகிக்கவே முடியாத அளவிற்கு வரக்கூடிய வலி என்றால் பல் வலியைத் தவிர வேறொன்றும் இருக்காது. பல் சொத்தை, ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் அதீத வலியோடு பற்களில் துர்நாற்றமும் வீசக்கூடும். என்ன தான் கடைகளில் விற்பனை செய்யப்படும் பற்பசைகளை வாங்கி உபயோகித்தாலும் தற்காலிக தீர்வாகத் தான் இருக்கும். நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்டு பற்பொடி தயாரிக்கலாம். இதுவரை இந்த பற்பொடியை முயற்சி செய்யவில்லை என்றால், இதோ எப்படி வீட்டிலேயே எளிமையாக செய்ய முடியும்? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இங்கே.
மேலும் படிக்க: கூர்மையான கண் பார்வைக்கு நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ
மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை: கொத்தமல்லியின் முக்கிய நன்மைகள்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப்பொருள்களையும் ஒவ்வொன்றாக ஒரு பவுலில் சேர்த்து கலந்துக் கொள்ளவும். இப்போது பற்களுக்கு வலுச்சேர்க்கும் ஆயுர்வேத பற்பொடி தயார். இதைத் தினமும் பற்பசைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்களுக்கு வலுசேர்க்கிறது.
வேப்ப இலையின் பொடியைப் பயன்படுத்தும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பிளேக்கை எதிர்த்துப் போராடுகிறது. ஈறுகள் வலுப்பெறவும், பல் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. புதினா பொடி மற்றும் மஞ்சள் பொடி போன்றவை சேர்க்கப்படுவதால் பற்களில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதோடு வாய் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது.
மேலும் படிக்க: உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க பாசிப்பயறு கஞ்சி போதும்!
பற்களில் வலி என்றாலே கிராம்பு தான் முதல் தேர்வாக இருக்கும். நாம் செய்யக்கூடிய பற்பொடிகளிலும் கிராம்பு சேர்க்கப்படுவதால் பற்களுக்கு வலியை ஏற்படுத்துவதோடு பல் வலியையும் குறைக்கிறது. இந்துப்பு இயற்கையாகவே பற்களை சுத்தப்படுத்துவதற்கு உதவுகிறது. இந்த ஆயுர்வேத பற்பொடியை அனைவரும் பயன்படுத்தலாம். ஒருவேளை அழற்சி எதுவும் இருந்தால் கொஞ்சமாகப் பயன்படுத்தவும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com