herzindagi
image

கூர்மையான கண் பார்வைக்கு நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

உங்கள் கண் பார்வையை கூர்மையாக வைத்திருக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து இதில் பார்க்கலாம். இவை அனைத்தும் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-11-04, 13:26 IST

இன்றைய சூழலில் கணினி மற்றும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கண்களுக்கு அதிக வேலை அளிக்கிறோம். இதனால், கண் சோர்வு மற்றும் பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

 

நமது உணவில் சில குறிப்பிட்ட சத்துள்ள உணவுகளை சேர்ப்பதன் மூலம், கூர்மையான கண் பார்வையை பராமரிக்க முடியும். அத்தகைய, கண் ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கிய உணவுகளின் பட்டியலை இதில் காணலாம்.

 

கேரட்:

 

கண் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காய்கறியாக கேரட் விளங்குகிறது. இதற்கு காரணம், உடலில் வைட்டமின் ஏ-ஆக மாற்றப்படும் பீட்டா கரோட்டின் (Beta-carotene) ஆகும். இதை தவிர, தீங்கு விளைவிக்கும் ஒளியில் இருந்து விழித்திரையை பாதுகாக்கும் லூட்டின் (Lutein) என்ற நிறமியும் கேரட்டில் உள்ளது. இதற்காக உங்கள் உணவில் சாலட் அல்லது பொரியல் வகையில் கேரட்டை எடுத்துக் கொள்ளலாம்.

 

கீரை:

 

இதில் லூட்டின் மற்றும் ஸீக்ஸாந்தின் (Zeaxanthin) என இரண்டு அன்டிஆக்சிடென்ட்கள் உள்ளன. இந்த சேர்மங்கள் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை தடுக்க உதவுகின்றன. மேலும், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் பார்வை சிதைவு பிரச்சனையை இவை தாமதப்படுத்துகின்றன. இதனால் உங்கள் உணவில் ஏதேனும் ஒரு கீரை வகையை சேர்த்துக் கொள்வது கண்களுக்கு நன்மை அளிக்கும்.

Spinach

மேலும் படிக்க: இருதய ஆரோக்கியம் முதல் செரிமானம் வரை: கொத்தமல்லியின் முக்கிய நன்மைகள்

 

நெல்லிக்காய்:

 

வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் நெல்லிக்காய் முதன்மையானது. இந்த வைட்டமின், கண்களில் கொலஜன் உற்பத்திக்கு அவசியமானது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது கண் நுண்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் கண்புரை அபாயத்தை குறைக்கிறது. நெல்லிக்காய் சாறு அல்லது பொடி என ஏதாவது ஒரு விதத்தில் நெல்லிக்காயை உங்கள் உணவில் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.

 

பூசணி விதைகள்:

 

பூசணி விதைகளில் சின்க் நிறைந்துள்ளது. இது, வைட்டமின் ஏ-வை கல்லீரலில் இருந்து விழித்திரைக்கு கொண்டு செல்ல உதவுகிறது. அங்கு, கண்களை பாதுகாக்கும் நிறமியான மெலனின் (melanin) உற்பத்திக்கு சின்க் உதவுகிறது. இந்த விதைகளை ஒரு சிட்டிகை உப்புடன் வறுத்து சாப்பிடுவது, மொறுமொறுப்பான, ஆரோக்கியமான சிற்றுண்டியாக அமையும்.

Pumpkin seeds

 

பாதாம்:

 

மூளை ஆரோக்கியம் மட்டுமின்றி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் பாதாமில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து கண்களை பாதுகாக்கிறது. தினமும் பாதாம் உட்கொள்வது கண்புரை மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பு அபாயத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த சத்தான உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் கண்களின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com