herzindagi
image

உடல் நல பாதிப்புகளைத் தவிர்க்க கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய வீட்டு வைத்தியங்கள்!

மக்களுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய தலைவலி முதல் கால் வலி, அஜீரணம் போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், வீட்டிலேயே சில வைத்திய முறைகளைப் பின்பற்றலாம்.
Editorial
Updated:- 2025-11-24, 23:58 IST

இன்றைக்கு உள்ள உணவு கலாச்சாரம், நாகரிகம் போன்ற பல்வேறு காரணங்களால் நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இதனால் ஏற்படக்கூடிய சிறிய உடல் நல பிரச்சனைகளுக்குக்கூட மருத்துவரை சந்திக்கும் பழக்கமும் அதிகமாகிவிட்டது. ஆனால் கடந்த தலைமுறையில் இந்த நடைமுறைகள் இல்லை. தலைவலி, வயிற்று வலி போன்ற சிறிய உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால் வீடுகளில் உள்ள பாட்டிகள் மற்றும் அம்மாக்கள் எளிதாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து கை வைத்தியம் பார்ப்பார்கள். இவ்வாறு செய்யும் போது எவ்வித பக்க விளைவுகள் இல்லாமல் உடல் நலத்தைப் பாதுகாத்து வந்தனர். இதுபோன்ற முறையை நீங்களும் சின்ன உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால், இதோ உங்களுக்கான எளிய கை வைத்திய முறைகள்.


உடல் நலத்தைப் பாதுகாக்கும் கை வைத்தியம்:

மூக்கடைப்பு மற்றும் சளி:

பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று சளி பிரச்சனையால் ஏற்படக்கூடிய மூக்கடைப்பு, இதனால் கடும் அவதிப்படுவோம். 7 நாட்களில் சரியாகிவிடும் என்று சொன்னாலும் மருத்துவமனைக்குச் செல்வோம். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் விரலிமஞ்சளைப் பயன்படுத்தலாம். முதலில் விரலி மஞ்சளை தீயில் வாட்டி மூக்கின் அருகில் வைத்து நுகரவும். மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: பழைய சோறு உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பல் வலி:

சாக்லேட் சாப்பிடும் குழந்தைகளுக்கு பல் வலி, பல் சொத்தை, பற்கூச்சம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் இந்த பிரச்சனையை அதிகம் சந்திக்கின்றனர். மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக, கொய்யா இலை , உப்பு போன்றவற்றை வைத்து கை வைத்தியம் மேற்கொள்வோம். சிறிதளவு உப்பை கொய்யா இலையில் வைத்து பல் வலிக்கும் இடங்களில் வைத்து மெல்லவும். இதன் சாறு உள்ளே போகும் போது வலியும் குணமாகிவிடும். மேலும் வாரத்திற்கு ஒருமுறை வேப்பங்குச்சி கொண்டு பல் துலக்கவும்.

மேலும் படிக்க: அதிகரிக்கும் பசி, அதீத சோர்வு; நீரிழிவு நோயின் 5 முக்கிய அறிகுறிகள்

அஜீரணம்:

அதிகமாக உணவு சாப்பிட்ட பலருக்கும் அஜீரண கோளாறு ஏற்படும். இதைத் தவிர்க்க விரும்பினால் சோம்பு சாப்பிடவும். இது அஜீரணத்தால் ஏற்படக்கூடிய ஏப்பம் போன்றவற்றைக் குறைக்கவும். இதோடு மட்டுமின்றி சுக்கு மற்றும் வெல்லத்தைத் தட்டிப்போட்டு உருண்டையாக பிடித்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் பறந்துபோய்விடும்.

 


தலைவலி என்பது அடிக்கடி ஏற்படக்கூடிய உடல் நல பிரச்சனை. இதற்காக மருந்து, மாத்திரைகள் அதிகம் சாப்பிடுவதை நிறுத்திவிடவும். அதற்கு மாற்றாக நீங்கள் வெங்காயத்தை நசுக்கி தலையில் தடவலாம். இதில் உள்ள காட்டம் தலையில் தேவையில்லாத நீரை வெளியேற்றி வலியைக் குறைக்க உதவும். இதோடு கேப்பை மாவை வைத்து தலையில் பத்துப் போடலாம். இதுவும் தலை வலிக்குத் தீர்வாக அமையும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com