
நம்முடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் அதிகப்படியான மாசுபாட்டின் காரணமாக சருமத்தில் மட்டுமல்ல பெண்களுக்கு தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அதிகளவில் ஏற்படுகிறது. முடி உதிர்தல், முடி கொட்டுதல், பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அழகுக்கலை நிபுணர்களின் அறிவுரைகளின் படி ஷாம்புகள் மற்றும் கன்டிஷனர்களை நம்மில் பெரும்பாலோனர் பயன்படுத்துவோம். இதில் தவறில்லை. சில அழகு சம்பந்தப்பட்ட பொருட்களில் கெமிக்கல் அதிகளவில் இருப்பதால் பல நேரங்களில் முடி கொட்டுதல் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பு மற்றும் கன்டிஷனர்களைப் பயன்படுத்த வேண்டும். இன்றைக்கு கெமிக்கல் இல்லாத வகையில் வீட்டிலேயே எப்படி கன்டிஷனர்கள் செய்யலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்து முடி உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமா? இந்த 5 இயற்கை பானங்களை குடித்து பயன் பெறவும்
பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே தங்களுடைய தலைமுடிக்கு கன்டிஷனர்களைப் பயன்படுத்துவது என்பது, முடியை நீரேற்றமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதோ வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சில கன்டிஷனர்கள் இங்கே..
பாதாம் பிசின் 1 கப் மற்றும் செம்பருத்தி பூக்களை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். பூவில் உள்ள மகரந்த காம்பு பயன்படுத்தக்கூடாது. இவற்றை நன்கு மூழ்கும் படி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாகவும் அரைத்தால் போதும் தலைமுடியை வலுவாக்கும் கன்டிஷனர் ரெடி. இவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எப்போது தலை அலசுகிறீர்களோ? அப்போது பயன்படுத்தவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடியை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்துக் கொண்டால் போதும் கன்டிஷனர் ரெடி. தலைக்கு அலசுவதற்கு முன்னதாக உச்சந்தலையில் இருந்து நுனி வரை தேய்த்து அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும். கூந்தல் வலுவுடன் இருக்க உதவியாக இருக்கும்.
தலைமுடி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும் என்றால் தேங்காய் பால் மற்றும் தேன் கலந்த கன்டிஷனர்களைப் பயன்படுத்தவும். ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பாசிப்பயறு மாவு சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்துக் கொள்ளவும். இதை தலைமுடியின் நுனியிலிருந்து வேர் வரை தடவி, பின்னர் தலையை அலசினால் போதும். தலைமுடி எப்போதும் மிருதுவாக இருக்க உதவியாக இருக்கும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com